Kidny

Kidny

காதலியின் பெற்றோர்களுக்குப் பயந்து காட்டுக்குள் ஒளிந்த மாணவன் கருங்கல் பாறை விழுந்து மரணம்.



காதலியின் பெற்றோர்களுக்குப் பயந்து காட்டுக்குள் இருந்த கருங்கற்கள் அடுக்கப்பட்டிருந்த குழியொன்றில் மறைந்திருந்த மாணவர் பாரிய கருங்கல் ஒன்று உடலில் விழுந்ததில் ஸ்தலத்திலேயே பலி ஆகியுள்ளார் .


இச்சம்பவமொன்று பாதுக்கையில் இடம் பெற்றுள்ளது. பாதுக்கை மீரியகல்ல என்ற இடத்தைச் சேர்ந்த ஏ.சானககுமார என்ற மாவத்தகம வித்தியாலயத்தில் பதினோராம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.

ஹங்வெல்ல, தித்தெனிய என்ற இடத்திலுள்ள நண்ப னொருவனின் இல்லத்தில் அம்மாணவி யுடன் இருந்த வேளை திடீரென வானொன்றில் அங்கு வந்த மாணவியின் பெற்றோரைக் கண்ட தும் இம் மாணவன் ஒடி மறைந்த போது இவ் வனர்த்தம் நிகழ்ந்ததாக ஆரம்ப விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.


காதலியின் பெற்றோர்களுக்குப் பயந்து காட்டுக்குள் ஒளிந்த மாணவன் கருங்கல் பாறை விழுந்து மரணம். காதலியின் பெற்றோர்களுக்குப் பயந்து காட்டுக்குள் ஒளிந்த மாணவன் கருங்கல் பாறை விழுந்து மரணம். Reviewed by Madawala News on 11/23/2017 03:19:00 PM Rating: 5