Kidny

Kidny

நாட்டு மக்கள் எமக்கு ஒத்துழையுங்கள். நாட்டை சீரழிக்கும் சிறிசேன - விக்கிரமசிங்க அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம்.


(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) 
நாட்டைத்தொடர்ந்து கடன்சுமைக்குள் தள்ளும் பொருளாதாரத்தை சீரழிக்கும் சிறிசேன - விக்கிரமசிங்க
அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப நாட்டு மக்கள் எமக்கு ஒத்துழைக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு - செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான இறுதிநாள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்று கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், இந்த வரவு-செலவுத்திட்டத்தின் மூலம் வரி வருமானம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வரி வருமானம் அதிகரித்தமையினால் ஐக்கிய தேசியக் கட்சியினர் பெருமை கொள்கின்றனர். நாட்டு மக்கள் மீது வரிக்கு மேல் வரி விதித்தமையினால் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் வாஷிங்டனிலுள்ள சர்வதேச நிதி நிறுவனங்கள் ஆனந்தமடையும், 2014 ஆம் ஆண்டில் எமது அரசாங்கத்தின் ஆட்சியில் செலுத்தியதிலும் பார்க்க இரு மடங்கு அதிகமான வரியை 2018 ஆம் ஆண்டில் செலுத்த வேண்டி ஏற் படும்.

அதேபோல் அரச சேவைகளுக்கான கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. மக்களின் பணத்தை சூறையாடும் இந்த அரசாங்கம் அதிகரிக்கும் வரி ஊடாக செய் துள்ள அபிவிருத்தி எதுவும் கிடையாது. விமானநிலையம், துறைமுகம், தாமரைத் தாடகம் போன்ற எதனையும் இவர்கள் அமைத்திருக்கவில்லை,

ஜனாதிபதிக்கும் அமைச்சர்களுக்கும்
புதிய வாகன கொள்வனவுகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

இதுபோன்ற  வீண் விரயங்கள் போன்ற வற்றில் இருந்து நாட்டை மீட்பதற்கு எந்த திட்டமும் முன் வைக்கப்பட்டிருக்கவில்லை. நாட்டு தலைவர்கள் ஏனையவர்கள் மீது குற்றச்சாட்டுக்களை மட்டுமே முன்வைத்து வருகின்றனர்.

இதனால் நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்ட போவதில்லை. அரச சொத்துக்கள் தனியாருக்கு விற்கப்படு வதற்கு எதிராக போராடுவோர் சிறையில் அடைக்கப்படுகின்றனர். எமது நாட்டு காணிகளில் நினைத்தவாறு வெளிநாட்டவர்களுக்கு அனுமதி வழங்க வரவு - செலவுத்திட்டத்தில் பரிந்துரைக் கப்பட்டுள்ளது. அரச வளங்களை குறைந்த விலைக்கு விற்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.


எமது நாட்டின் சொத்துக்கள் எமது நாட்டுக்கு மக்களுக்கே சொந்தமானவையாகும்.

 5 வருடஆட்சிக்கு வரும் ஆட்சியாளர்க ளுக்கு அவற்றை விற்கவோ குத்தகைக்கு வழங்கவோ முடியாது.

நாட்டில் கடன் பொறியை ஏற்படுத்தியது யார்? நவீன உலகில் கடன் பெறாத நாடோ அல்லது நிறுவனமோ கிடையாது. கடன் பெறுவதை விட கடன் செலுத்தும் இயலுமையே இங்கு பிரதானமானதாகும்.

எமது ஆட்சியில் யுத்தத்திற்காகவே கூடுதல் கடன் பெறப்பட்டது. 2009 ஆம்
ஆண்டு முதல் பாரிய அபிவிருத்தி திட் டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

யுத்தத்தின் பின்னர் வடக்கு, கிழக்கில் பாரிய உட்கட் டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. சிறிசேன அரசாங்கமே எமது நாட்டை கடன் பொறியில் சிக்கவைத்துள்ளது. கடந்த இரண்டரை வருடங்களில் பெற்ற கடனானது 2009 முதல் 2014ஆம் ஆண்டு வரை பாரிய அபிவிருத்திகளை மேற்கொள் ளப்பட்ட 5 வருட காலத்தில் நாம் பெற்ற கடனில் 86 சதவீதமாகும்.

இந்த ஆட்சியில் கண்ணுக்குத் தெரியும் எந்த அபிவிருத் தியும் நடக்கவில்லை. 2010 முதல் 2014ஆம் ஆண்டு வரை பொருளாதார வளர்ச்சி வேகமானது 68 சதவீதமாக பேணப்பட்டது.

2016 ஆம் ஆண்டில் இது 2.6 சதவீதமே காணப்பட் டாலும் அரசாங்கம் தவறான புள்ளிவிபரங் களை முன்வைக்கிறது.

இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு பெருமளவு குறைந்துள்ளது. 2020 ஆம் ஆண்டிலும் 2014 ஆம் ஆண்டில் இருந்த அளவே அந்நிய செலாவணி கையி ருப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது  , தற்போதைய ஆட்சி ஏற்படுத்தியுள்ள கடன்பொறியில் இருந்து மீண்டு வருவது கடினமாகும்.


கடன் செலுத்த முடிய வில்லை என்று நாம் எமது ஆட்சியின் போது கண்ணீர் சிந்தவில்லை. உலக நிதி நிறுவனங்களின் சொற்படி ஆடவுமில்லை. மக்களுக்கு வழங்கும் நிவாரணங் களை குறைக்காது பொருளாதாரத்தை கட்டியெழுப்பினோம்.


30 வருட யுத்தம் முடிவடைந்த பின்னர் வரவு - செல வுத் திட்ட துண்டுவிழும் தொகையை கட்டம் கட்டமாக குறைத்தோம். எந்த கட்டுப்பாடும் இன்றி சூறாவளியில் சிக்கியுள்ள படகாகவே தற்போதைய ஆட்சியை ஒப்பிட முடியும். இந்த மோசடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். மக்களின் மனநிலையை உணர்ந்து அரசாங்கம் தேர்தலை ஒத்திவைத்து வருகிறது.விரைவில் தேர்தல் நடக்குமானால் மக்களின் நிலைப்பாடு வெளியாகும்.ஆகவே நாட்டைதொடர்ந்து கடன்கமைக்குள் தள்ளும் பொருளாதாரத்தை சீரழிக்கும் சிறிசேன - விக்கிரமசிங்க அரசாங்கத்தை வீட்டு அனுப்ப நாட்டு மக்கள் எமக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
நாட்டு மக்கள் எமக்கு ஒத்துழையுங்கள். நாட்டை சீரழிக்கும் சிறிசேன - விக்கிரமசிங்க அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம். நாட்டு மக்கள் எமக்கு ஒத்துழையுங்கள். நாட்டை சீரழிக்கும் சிறிசேன - விக்கிரமசிங்க அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம். Reviewed by Madawala News on 11/17/2017 10:16:00 AM Rating: 5