Yahya

ஜனா­தி­ப­தி­யாக நான் நாட்டில் இருக்­கும் ­வரை எந்த இரா­ணுவ வீர­ரையும் யுத்த நீதி­மன்றில் நிறுத்த விடமாட்டேன் .


இந்த நாட்டின் ஜனா­தி­ப­தி­யாக நான் இருக் கும் வரையில் எந்­த­வொரு இரா­ணுவ வீர­ரையும் வெளி­நாட்டு நீதி­ப­திகள் முன் நிறுத்­து­வ­தற்கு ஒரு­போதும் இட­ம­ளிக்க மாட்டேன் என்­பதை மிகவும் உறு­தி­படத் தெரி­வித்­துக்­கொள்­கின்றேன் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

கொழும்பு இரா­ணுவ வைத்­தி­ய­சா­லையின் கேட்போர் கூடத்தில் நேற்று முன்­தினம் இடம்­ பெற்ற இரா­ணுவ வீரர்­க­ளு­ட­னான நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்டு   உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.   ஜனா­தி­பதி அங்கு மேலும் உரை­யாற்­று­கையில்; நீங்கள் அனை­வரும் பாரிய அர்ப்­ப­ணிப்­புடன் இந்த நாட்டைப் பாது­காப்­ப­தற்­காக முன்­வந்­த­வர்கள். தேசிய அனர்த்தம் ஒன்று இடம்­பெற்ற ஒவ்­வொரு சந்­தர்ப்­பத்­திலும் உங்கள் உயிர்­களை துச்­ச­மென மதித்து செயற்­ப­டு­கின்ற உங்­க­ளுக்கு நாங்கள் அனை­வரும் கடன்­பட்­ட­வர்கள்.  

இந்த தேசத்­திற்­காக முன்­னிற்­கின்ற நீங்கள் தேசிய அனர்த்­தங்­க­ளான மண்­ச­ரிவு, தொற்­றுநோய் அபாயம் போன்ற பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் செயற்­ப­டு­கின்ற விதம் எமக்குத் தெரியும். அமை­தி­யான சமூகம் என்ற வகையில் சமா­தானம், நல்­லி­ணக்கம், மற்றும் ஒற்­றுமை, புரிந்­து­ணர்­வுடன் ஒரு பாரிய பய­ண­மொன்றை இந்­த­நாடு சென்­று­கொண்­டி­ருக்­கின்ற நிலையில் உங்­களின் ஒத்­து­ழைப்பு அதற்கு மிகவும் அதி­க­மா­கவே அவ­சி­ய­மா­கின்­றது.

இந்­த­நாட்டின் தலை­வ­ராக நான் இருக்கும் வரை உங்­களில் ஒரு­வ­ரையும் எந்­த­வொரு யுத்­தக்­குற்ற விசா­ரணை நீதி­மன்­றத்­திற்கும் அனுப்ப மாட்டேன் என்­பதை வாக்­கு­று­தி­யாக அளிக்­கின்றேன். யாரா­வது தவ­றுகள் செய்­தி­ருந்தால் நாட்டில் தற்­போது காணப்­ப­டு­கின்ற சட்­டத்தின் அடிப்­ப­டையில் நீதி­மன்­றத்தின் முன் நிறுத்­தப்­ப­டு­வார்கள்.

சில எதிர்­பார்ப்பு இல்­லாத அர­சி­யல்­வா­திகள் மற்றும் ஓய்வு பெற்ற இரா­ணுவ அதி­கா­ரிகள் இரா­ணுவ வீரர்­களை யுத்­த­நீ­தி­மன்­றத்தில் நிறுத்தி தண்­டனைப் பெற்­றுக்­கொ­டுக்க நாங்கள் முயற்­சிப்­பாக கூறி­வ­ரு­கின்­றனர். ஆனால் இந்த நாட்டின் ஜனா­தி­பதி என்ற வகையில் அவ்­வாறு எதுவும் இடம்­பெ­று­வ­தற்கு, அனு­ம­திக்­க­மாட்டேன். எந்­த­வொரு இரா­ணுவ வீர­ரையும் வெளி­நாட்டு நீதி­ப­திகள் முன்னால் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்த இட­ம­ளிக்க மாட்டேன் என்­பதை மிகவும் தெளி­வாக குறிப்­பி­டு­கின்றேன்.

 இவ்­வா­றான அடிப்­ப­டை­யற்ற விட­யங்­களைக் கூறி உங்­களை ஏமாற்­று­வ­தற்கு சிலர் முயற்­சிக்­கலாம் என்­பதை நான் உங்­க­ளுக்கு கூறி­வைக்­கின்றேன்.

உலகின் எந்­த­வொரு மனி­தா­பி­மான உரி­மைகள் தொடர்­பான எந்­த­வி­த­மான அமைப்­பிற்கும் இலங்கை இரா­ணுவ வீரர்கள் மீது அழுத்தம் பிர­யோ­கிப்­ப­தற்கு நான் இட­ம­ளிக்­க­மாட்டேன். இறைமை உள்ள நாடு என்­ற­வ­கையில் எந்­த­வி­த­மான தலை­யீ­டு­மின்றி எமது பிரச்­சி­னையை தீர்த்­துக்­கொள்ள எம்மால் முடியும் என்­பதை ஐக்­கி­ய­நா­டு­க­ளுக்கு நான் அறி­வு­றுத்­தி­யி­ருக்­கின்றேன். ஒரு­சில வதந்­தி­களை வெளி­யி­டு­கின்­ற­வர்­க­ளுக்கு ஏமா­ற­வேண்டாம். என்னை நம்­பு­மாறு உங்­களை கோரு­கின்றேன்.

அனர்த்த நேரங்­களின் போது நீங்கள் அனை­வரும் செய்­கின்ற விசே­ட­மான அந்த சேவையை நான் பாராட்­டு­கின்றேன். ஒரு­நாடு என்­ற­வ­கையில் சமா­தானம், மற்றும் நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்­கு­வ­தற்­காக உங்­களின் ஒத்­து­ழைப்பை பெற்­றுத்­த­ரு­மாறு கோரிக்கை விடுக்­கின்றேன். எந்­த­வொரு இரா­ணுவ வீரரும் வெளி­நாட்டு சுற்­றுலா செல்­வ­தற்கு எந்­த­வி­த­மான தடையும் இல்லை என்­பதை நான் மிகவும் திட்­ட­வட்­ட­மாக வலி­யு­றுத்­திக்­கூற விரும்­பு­கின்றேன்.

அனை­வரும் பல்­வேறு கடி­னங்­க­ளுக்கு மத்­தியில் பெற்­றுக்­கொண்ட இந்த சமா­தானம் சௌபாக்­கியம் என்­ப­வற்றை தொடர்ந்தும் வைத்­துக்­கொள்­வது மிகவும் முக்­கி­ய­மாகும். தற்­போது காணப்­ப­டு­கின்ற ஆரோக்­கி­ய­மான நிலை­மையை மேலும் முன்­கொண்­டு­செல்ல வேண்டும். அதற்கு அர­சாங்கம் அனைத்து முயற்­சி­க­ளையும் எடுக்கும்.

இலங்கை இரா­ணு­வத்தை எதிர்­கா­லத்தில் உலகின் சிறந்த விசே­ட­மான இரா­ணு­வங்­களில் ஒன்­றாக உரு­வாக்­கு­வ­தற்கு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும். யுத்­தத்­தின்­போது தோற்­க­டிக்­கப்­பட்ட புலிகள் வெளி­நா­டு­களில் நிதி சேக­ரிப்­பதை இன்றும் முன்­னெ­டுக்­கின்­றனர். பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­பட்டு கூட்­டங்­களை ஏற்­பாடு செய்து வெற்­றி­ய­டை­யாத முயற்­சி­களில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். அவர்­களை மேலும் வெற்­றி­பெ­றா­த­வர்­க­ளாக ஆக்­கு­வ­தற்­கு­ரிய செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­க­வேண்டும். அவர்­களின் கருத்­தி­யலைத் தோற்­க­டிக்­க­வேண்டும். அந்­தக்­க­ருத்­தி­யலை எமது பூமி­யி­லி­ருந்து அகற்­றி­வி­ட­வேண்டும். அவர்­களின் மன­தி­லி­ருந்தும் அவற்றை நீக்­கி­வி­ட­வேண்டும்.

அந்த கருத்­தி­யலை அகற்­று­வ­தற்­காக நாம் அனை­வரும் ஒன்­றி­ணைந்து செயற்­ப­ட­வேண்டும். நாங்கள் இரா­ணு­வத்தை குறைத்து மதிப்­பி­டு­வ­தா­கவும், இரா­ணு­வத்தின் வளங்­களை குறைப்­ப­தா­கவும் சிலர் கூறு­கின்­றனர். நாங்கள் இரா­ணு­வத்தை வேட்­டை­யா­டு­வ­தாக கூறு­கின்­றனர். ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேரவை ஊடாக இரா­ணு­வத்­தி­னரை காட்­டிக்­கொ­டுத்­துள்­ள­தாக சிலர் கூறுகின்றனர். இவ்வாறு கூறுகின்றவர்களில் அரசியல்வாதிகள் ஊடகவியலாளர் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் உள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை 2015 ஆம் ஆண்டு முன்வைத்த யோசனை அதற்கு முன்னர் முன்வைத்த யோசனை என்ன என்பதனை பார்க்கவேண்டும். முன்னைய ஆட்சிக்காலத்தில் ஐ.நா. என்ன கூறியது என்பதனை பார்க்கவேண்டும். குற்றச்சாட்டுக்கள் இருப்பின் இலங்கை அரசாங்கமே விசாரிக்கும் என்பதனை கூறியுள்ளோம். இப்போது சில நாடுகளுக்கு செல்வதற்கு எமது இராணுவத்துக்கு வீசா கிடைப்பதில்லை. நாங்கள் அந்த நிலையை மாற்றியமைக்கவேண்டும். அதற்காக நுட்பமாக செயற்படவேண்டும்.
ஜனா­தி­ப­தி­யாக நான் நாட்டில் இருக்­கும் ­வரை எந்த இரா­ணுவ வீர­ரையும் யுத்த நீதி­மன்றில் நிறுத்த விடமாட்டேன் . ஜனா­தி­ப­தி­யாக நான் நாட்டில் இருக்­கும் ­வரை எந்த இரா­ணுவ வீர­ரையும் யுத்த நீதி­மன்றில் நிறுத்த விடமாட்டேன் . Reviewed by Madawala News on 11/11/2017 03:08:00 PM Rating: 5