Kidny

Kidny

ஒரு முஸ்லிம் எப்போதும் நியாய‌த்தையே பேச‌ வேண்டும்.


இஸ்லாத்தில் ஒரு ப‌க்க‌ நியாய‌ம் இல்லை. ஒரு முஸ்லிம் எப்போதும் நியாய‌த்தையே பேச‌
வேண்டும் என்ப‌தை க‌ருத்திற்கொண்டே உல‌மா க‌ட்சி ச‌க‌ல‌ விட‌ய‌ங்க‌ளையும் நீதியாக‌ பேசுகிற‌து.

ந‌ம‌து நாட்டில் இறுதி யுத்த‌கால‌த்தில் ந‌டை பெற்ற‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளுக்கு இல‌ங்கை ராணுவ‌ம் விசாரிக்க‌ப்ப‌ட‌ வேண்டும் என்று சொல்ப‌வ‌ர்க‌ள் முஸ்லிம்க‌ள் மீது புலிக‌ளாலும் இன்றைய‌ த‌மிழ் கூட்ட‌மைப்பில் உள்ள‌ க‌ட்சிக‌ளாலும் மேற்கொள்ள‌ப்ப‌ட்ட‌ யுத்த‌ மீற‌ல்க‌ளுக்கும் விசார‌ணை வேண்டும் என‌ சொல்வோர் குறைவு.

அதே போல் ஐ தே க‌ அர‌சால் 83ம் ஆண்டு 100 வீத‌ அப்பாவி த‌மிழ் ம‌க்க‌ள் மீது மேற்கொள்ள‌ப்ப‌ட்ட‌ யுத்த‌மீற‌ல்க‌ளும் விசாரிக்க‌ப்ப‌ட‌ வேண்டும் என‌ சொல்வோர் அதை விட‌க்குறைவு. அத்துட‌ன் வெலிக்க‌டை சிறைச்சாலைக்குள் த‌மிழ் கைதிக‌ள் அர‌சின் அனுச‌ர‌ணையுட‌ன் கொல்ல‌ப்ப‌ட்டார்க‌ள்.

குட்டிம‌ணி போன்றோர் இதில் அட‌ங்குவ‌ர்.

அதே போல் ஐ தே க‌ கால‌த்தில் வாழைச்சேனையில் இரு முஸ்லிம்க‌ளின் ஜ‌னாசா எரிப்பு ப‌ற்றி பேசுவோர் இல்லை. இவை அனைத்தும் நாட்டில் யுத்த‌ கால‌த்தில் நடை பெற்ற‌வைதான்.

அதே போல் காத்தான்குடி ப‌ள்ளிவாச‌ல் ப‌டுகொலை, குருக்க‌ள் ம‌ட‌ம் ஹாஜிக‌ள் ப‌டுகொலை, க‌ல்முனை முஸ்லிம் வாலிப‌ர்க‌ள் புலிக‌ளால் பிடித்துச்செல்ல‌ப்ப‌ட்டு இன்று வ‌ரை இல்லாம‌லாக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள், அலி உதுமான் போன்றோர் ப‌டுகொலை, க‌ல்முனை பொலிசார் 600பேர் ப‌டுகொலை, வ‌ர‌தராஜ‌ பெருமாளின் த‌மிழ் தேசிய‌ ராணுவ‌ம் மேற்கொண்ட‌ 40 முஸ்லிம் பொலிசார் ப‌டுகொலை என‌ ஐக்கிய‌ தேசிய‌ க‌ட்சியின் ஆட்சிக்கால‌த்தில் ந‌டைபெற்ற‌ யுத்த‌மீற‌ல்க‌ளும் முத‌லில் விசாரிக்க‌ப்ப‌ட‌ வேண்டும்.

ம‌ஹிந்த‌ கால‌த்தில் ந‌டை பெற்ற‌தாக‌ கூற‌ப்ப‌டும் யுத்த‌ குற்ற‌ விசார‌ணைக‌ள் ம‌ட்டும் விசாரிக்கப்‌ப‌ட‌ வேண்டும் என‌ கூறுப‌வ‌ர்க‌ள் மேற்சொன்ன‌ விட‌ய‌ங்க‌ளில் மௌன‌ப்போக்கு க‌டைப்பிடிப்ப‌து எந்த‌ வ‌கை நியாய‌ம் என்றுதான் கேட்கிறோம். அப்ப‌டித்தான் விசாரிக்க‌ வேண்டும் என்றால் ப‌டிமுறைப்ப‌டி விசாரிக்க‌ப்ப‌ட‌ வேண்டும். அதாவ‌து 83ஐ முத‌லில் விசாரித்து அத‌ன்பின் அண்மைய‌ ஜின்தோட்டை வ‌ரை விசாரிக்க‌ வேண்டும். அதிலும் ஐ தே க‌ ர‌ணில் ஆட்சியின் பாதுகாப்பு ப‌டை ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்டுள்ள‌தான‌ குற்ற‌ச்சாட்டும் உள்ள‌து.

ஆக‌வே நீதி, நியாய‌ம் என்றால் அனைத்தும் நீதியாக‌ இருக்க‌ வேண்டும்.
இத‌னை விடுத்து ம‌ஹிந்த‌ கால‌த்து யுத்த‌மீற‌ல் ம‌ட்டுமே விசாரிக்க‌ப்ப‌ட‌ வேண்டும் என்ப‌து நியாய‌ம‌ற்ற‌தாகும் என்ப‌தே உல‌மா க‌ட்சியின் நிலைப்பாடாகும்.

- முபாற‌க் அப்துல் ம‌ஜீத்
உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர்
ஒரு முஸ்லிம் எப்போதும் நியாய‌த்தையே பேச‌ வேண்டும். ஒரு முஸ்லிம் எப்போதும் நியாய‌த்தையே பேச‌ வேண்டும். Reviewed by Madawala News on 11/30/2017 12:11:00 PM Rating: 5