Ad Space Available here

நாடாளுமன்றத்துக்கு நடிகர்கள் வருகை தந்தார்கள். அதை, மக்கள் அனைவரும் கண்டிப்பார்கள்.


“2018ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம், எங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் எதிரணியின் வாயை அடைக்கும்” என, தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இறம்பொட ஸ்ரீ கல்கி மாணவர் சேவா அமைப்பு ஒழுங்கு செய்திருந்த, இவ்வருடம் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று, இறம்பொட தொண்டமான் கலாசார மண்டபத்தில், நேற்று (12), அமைச்சரின் தலைமையில் நடைபெற்றது.  இந்நிகழ்வின் பின், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“2018ஆம் ஆண்டுக்குரிய வரவு - செலவுத் திட்டமானது, இந்த நாட்டில் அனைத்து மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றாக அமையும். இந்த வரவு - செலவுத் திட்டத்தில், மலையகம், வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பு வாழ மக்கள், தனித்து சொந்த வீடுகளில் வாழும் வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்துள்ளது.

சூழலுக்கு ஏற்ப தனிவீடுகள் அமைக்கப்பட்டு, சுதந்திரமாக வாழக்கூடிய வசதி, இந்த வரவு - செலவுத் திட்டத்தின ஊடாக ஏற்படவுள்ளது. வரவு - செலவுத் திட்டத்தின் வாதப் பிரதிவாதங்கள், நாடாளுமன்றத்தில் ஒரு மாத காலத்துக்கு இடம்பெறும். இதன்பின், மக்கள் அணைவரும் ஏற்றுக்கொள்ள கூடிய அபிவிருத்தித் திட்டங்கள் இவர்களுக்குக் கிட்டும். அந்த நிலையில், எங்களை எதிர்த்துப் பிரசாரம் செய்யும் எதிரணியின் வாய் அடைக்கப்படும் என்பதில் ஐயம் இல்லை.

“சமீபத்தில் நாடாளுமன்றத்துக்கு நடிகர்கள் வருகை தந்தார்கள். அதை, மக்கள் அனைவரும் கண்டிப்பார்கள். இந்த நடிகர்கள் தான், இந்த நாட்டின் வளர்ச்சிக்குப் பாதகமாகச் செயற்படுபவர்கள். அரசமைப்பு வரக்கூடாது என்பதை தெரிவித்தவர்கள் யார்?

“இவர்கள் இந்த நாட்டில், பௌத்த மக்களுக்கு தனி ஓர் இடம் இல்லாமல் போய்விடும் என்பதை வைத்துக்கொண்டே, இந்த அரசமைப்பை எதிர்த்து நின்றார்கள். வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்லர் இவர்கள்.

“இவர்கள் எடுத்து வைக்கும் பொம்மைகளும் நாங்கள் இல்லை. எடுப்பார் கைப்பிள்ளை போல் இருக்க மாட்டோம் எனத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்துக்கு நடிகர்கள் வருகை தந்தார்கள். அதை, மக்கள் அனைவரும் கண்டிப்பார்கள். நாடாளுமன்றத்துக்கு நடிகர்கள் வருகை தந்தார்கள். அதை, மக்கள் அனைவரும் கண்டிப்பார்கள். Reviewed by Madawala News on 11/13/2017 08:18:00 AM Rating: 5