Kidny

Kidny

அநாகரீக முயற்சி மகனுக்கு தெரிய வந்ததால் தந்தை தற்கொலை. #கம்பளை பகுதியில்


கம்பளை பகுதியில், தனது மருமகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட வேளை, மகன் பார்த்து விட்டதால், தந்தை ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குறித்த நபருக்கு திருமணமான இரண்டு மகன்கள் உள்ளதாகவும், அப் பகுதியிலுள்ள மதத் தலம் ஒன்றை அவர் நடத்தி வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், தனது மூத்த மகனின் 22 வயதான மனைவி, சம்பவ தினத்தன்று வழிபாட்டுக்காக மதத் தலத்திற்கு சென்றுள்ளார்.

அங்கிருந்த மாமனார் தன்னை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட போது, அப் பெண் கூச்சலிட்டுள்ளார்.

இதனைக் கேட்ட அப் பெண்ணின் கணவர் அப் பகுதிக்கு விரைந்து சென்ற வேளை, தந்தையின் அநாகரீக செயலை கண்ணுற்றுள்ளார் எனத் தெரிகிறது.

இதனையடுத்து தந்தையைத் தாக்கிவிட்டு மனைவியை அழைத்துச் சென்ற அவர், வீட்டைவிட்டு வௌியேற முற்பட்டுள்ளனர்.

எனினும், நீங்கள் செல்ல வேண்டாம் நானே செல்கிறேன் எனக் கூறிவிட்டு, வௌியே சென்ற தந்தை, புனிதத் தலத்தில் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்
அநாகரீக முயற்சி மகனுக்கு தெரிய வந்ததால் தந்தை தற்கொலை. #கம்பளை பகுதியில் அநாகரீக முயற்சி மகனுக்கு  தெரிய வந்ததால் தந்தை தற்கொலை. #கம்பளை பகுதியில் Reviewed by Madawala News on 11/15/2017 05:07:00 PM Rating: 5