Kidny

Kidny

நீரோடையில் கார் விழுந்தது. தாய் மற்றும் தந்தை உயிரிழப்பு. மகனை காணவில்லை.



மஹியங்கனை வியானா நீரோடையில் கார் ஒன்று விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

அத்துடன் ஒருவர் நீரில் மூழ்கியதில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

உயிரிழந்த இருவரில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் அடங்குகின்றனர். ( தாய் மற்றும் தந்தை- மகன் பயணித்த கார்)

கார் நீரோடையில் விழுந்ததையடுத்து கார் நீரில் மூழ்கியுள்ளதால் காரினுள் இருந்தவர்களால் வௌியேற முடியாத நிலையில் இருவரும் உயிரிழந்துள்ளதுடன், காரில் பயணித்த மற்றொருவரை இதுவரை காணவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. 

பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸாரின் நீண்ட நேர முயற்சியின் பின்னர் கார் நீரினுள் இருந்து வௌியே உடுக்கப்பட்டதுடன், உயிரிழந்த இருவரினதும் சடலங்கள் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.


நீரோடையில் கார் விழுந்தது. தாய் மற்றும் தந்தை உயிரிழப்பு. மகனை காணவில்லை. நீரோடையில் கார் விழுந்தது. தாய் மற்றும் தந்தை உயிரிழப்பு. மகனை காணவில்லை. Reviewed by Madawala News on 11/23/2017 07:36:00 PM Rating: 5