Kidny

Kidny

'யுத்தத்திற்கு செல்பவர்கள் ஆயுதங்களை வெளிக்காட்டிச் செல்வதில்லை' . உள்ளுராட்சி தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி.


முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ வுடன் பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்­காக ஐக்கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சார்பில் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. இக்குழுவில் டியு குண­சே­கர, ஆறு­முகன் தொண்­டமான், டக்ளஸ் தேவா­னந்தா, அதா­வுல்லா ஆகியோர் இடம்­பெற்­றுள்­ள­தோடு சுதந்­தி­ரக்­கட்­சியின் சார்­பி­லான உறுப்­பி­னர்கள் யார் என்­பது மிகக்­கு­று­கிய நாட்­களில் அறி­விக்­கப்­ப­ட­வுள்­ளது.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் இடம்­பெற்­றுள்ள சிறு மற்றும் சிறு­பான்மை கட்­சி­க­ளுக்கும் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சிக்­கு­மி­டை­யி­லான சந்­திப்­பொன்று நேற்று முன்­தினம் இரவு கொழும்பில் உள்ள ஜனா­தி­ப­தியின் தனிப்­பட்ட இல்­லத்தில் நடை­பெற்­றது.

இந்த சந்­திப்பில், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான சுதந்­தி­ரக்­கட்சி உறுப்­பி­னர்கள் அடங்­கிய குழுவில் நிமல் சிறி­பால டீ சில்வா, சுசில் பிரேம ஜயந்த, துமிந்த திஸா­நா­யக்க, மகிந்த அம­ர­வீர, அநுர பிரி­ய­தர்­சன யாப்பா உள்­ளிட்­ட­வர்கள் பங்­கேற்­றனர்.

பங்­கா­ளிக்­கட்­சி­களின் சார்பில் டி.யூ.குண­சே­கர தலை­மை­யி­லான கம்­னியூஸ்ட் கட்சி, அத­வுல்லா தலை­மை­யி­லான தேசிய காங்­கிரஸ், ஆறு­முகன் தொண்­டமான் தலை­மை­யி­லான இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ், டக்ளஸ் தேவா­னந்தா தலை­மை­யி­லான ஈழ­மக்கள் ஜன­நாயக் கட்சி ஆகி­யன பங்­கேற்­றி­ருந்­தன.

இதன்­போது உள்­ளூ­ராட்சி தேர்தல் நடை­பெறும் பட்­சத்தில் எவ்­வா­றான நிலை­மைகள் ஏற்­படும் என்­பது தொடர்பில் முதலில் கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ளது. அச்­ச­ம­யத்தில் பங்­கா­ளிக்­கட்­சி­களின் தலை­வர்கள் சிலர் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ சுதந்­தி­ரக்­கட்­சி­யி­லி­ருந்து விலகிச் செல்­வா­ராயின் அது ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணிக்கு பலத்த பின்­ன­டை­வினைக் கொடுக்கும். ஆகவே அவ­ரையும் இணைத்து பல­மான அணி­யாக சுதந்­தி­ரக்­கட்சி தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி கள­மி­றங்க வேண்டும் என்றும் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.

இவ்­வா­றான நிலையில் உள்­ளு­ராட்சி தேர்தல் தொடர்­பி­லான கள நில­வ­ரங்­களை ஆராய்­வ­தற்­காக சுதந்­தி­ரக்­கட்­சி­யா­னது குழு­வொன்றை நிய­மித்­துள்­ளது. அக்­கு­ழு­வா­னது தற்­போது ஆய்வு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றது. குறித்த குழுவின் முடிவின் பிர­கா­ரமே சுதந்­தி­ரக்­கட்­சி­யா­னது அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வுள்­ளது.

இருப்­பினும் தற்­போது சுதந்­தி­ரக்­கட்­சியின் உயர்­பீட தீர்­மா­னத்தின் பிர­காரம் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யாக கள­மி­றங்­கு­வ­தற்கு தயா­ரா­க­வுள்ள அதே­நேரம் குறிப்­பிட்ட ஒரு சில இடங்­களில் தனித்து சுதந்­தி­ரக்­கட்­சி­யாக போட்­டி­யி­டு­வ­தற்கும் தயா­ராக இருக்க வேண்டும் என்று தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இருப்­பினும் அவை எந்த பிர­தே­சங்கள் என்­பது தொடர்­பாக இது­வ­ரையில் முடி­வொ­டுக்­கப்­ப­ட­வில்லை என்றும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இத­னை­ய­டுத்து பங்­கா­ளிக்­கட்­சியின் தலை­மைகள் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சின்னம் தொடர்­பாக கவனம் செலுத்­தி­னார்கள்.

ஏற்­க­னவே ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் அங்­கத்­துவம் வகிப்­ப­தற்கு சுதந்­தி­ரக்­கட்­சி­யுடன் புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்­ட­போதும் சின்னம் சம்­பந்­த­மாக குறிப்­பிட்­டி­ருந்தோம். குறிப்­பாக சுதந்­தி­ரக்­கட்­சியின் கை சின்­னத்தில் போட்­டி­யி­டு­வ­தா­னது சிறு­பான்மை மக்கள் மத்­தியில் அதி­ருப்­தி­யினை ஏற்­ப­டுத்தும். எஸ்.டபிள்யு. ஆர்.டி பண்­டா­ர­நா­யக்­கவின் கடந்த கால செயற்­பட்டால் அந்த கை சின்னம் தமிழ் மக்கள் மத்­தி­யி­லி­ருந்து வெகு­தூ­ரத்தில் உள்­ளது. ஆகவே அதனை விடுத்து கதிரை அல்­லது வெற்­றிலை சின்­னத்­தினை கூட்­ட­ணிச்­சின்­ன­மாக கொண்டு கள­மி­றங்­கு­வது பொருத்­த­மா­னது என்று வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

இதன்­போது அவ்­வி­டயம் சம்­பந்­த­மாக தொடர்ந்தும் கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்டு முடி­வு­களை எட்­டுவோம் என சு.க. தரப்பில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அத­னை­ய­டுத்து முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் விடயம் சம்­பந்­த­மாக கவனம் செலுத்­தப்­பட்­டது. ஏற்­க­னவே ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி பல­ம­டைய வேண்­டு­மாயின் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­வையும் இணைப்­பது பொருத்­த­மா­ன­தாக இருக்கும் என்று ஆலோ­சனை கூறப்­பட்­டி­ருந்த நிலையில் இவ்­வி­டயம் சம்­பந்­த­மான கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொள்­வதே பொருத்­த­மா­ன­தாக இருக்கும் என்றும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.

 இத­னை­ய­டுத்து பங்­கா­ளிக்­கட்­சிகள் மற்றும் சுதந்­தி­ர­கட்சி ஆகிய இரு­த­ரப்பின் இணக்­கத்தின் பிர­காரம் முன்னாள் ஜனா­தி­ப­தி­யுடன் பேச்­சுக்­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டது. இதில் பங்­கா­ளிக்­கட்­சி­களின் முக்­கி­யஸ்­தர்­க­ளான டி.யு.குண­சே­கர, டக்ளஸ், ஆறு­முகன் தொண்­டமான், அதா­வுல்லா ஆகி­யோரின் முன்­மொ­ழி­யப்­பட்­ட­தோடு சுதந்­தி­ரக்­கட்­சியின் உறுப்­பி­னர்கள் தொடர்பில் விரைவில் அறி­விக்­கப்­படும் என்றும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

தொடர்ந்து உள்­ளூ­ராட்சி தேர்­தலில் தாங்கள் சில இட­யங்­களில் தனித்துப் போட்­டி­யிட வேண்­டி­யுள்­ள­தா­கவும் அதற்­கான கார­ணங்­க­ளையும் ஜனா­தி­ப­தி­யி­டத்தில் பங்­கா­ளிக்­கட்­சிகள் குறிப்­பிட்­டன.

இத­னை­ய­டுத்து அந்த விட­யங்கள் தொடர்பில் ஆராய்­வ­தற்கு மீண்டும் ஒரு தடவை கூடு­வ­தெ­னவும் தற்­போ­தைக்கு தனி­யாக போட்­டி­யிடும் அவ­சியம் ஏற்­பட்டால் அந்­தந்த இடங்­களில் தனித்து போட்­டி­யிட முடியும் எனவும் மேலும் இரு­த­ரப்­பிலும் முன்­மொ­ழியும் வேட்­பா­ளர்­களை கள­மி­றக்­கு­வ­தற்கு வாய்ப்­புக்கள் சுமு­மாக வழங்­க­வ­தென்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் குறித்த கூட்டம் முடிவுக்கு வந்திருந்தது. எனினும் இந்த கூட்டத்தின் இடையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாக பல கருத்துக்களை முன்வைத்ததோடு சிறுபான்மை,சிறு அரசியல் கட்சிகள் தம்முடன் இணைந்திருக்க வேண்டும் என்ற தொனிப்பட கருத்துக்களை வெ ளிப்படுத்தியுள்ளார்.

அத்துடன் உள்ளுராட்சி தேர்தல் சம்பந்தமாக கூறும் போது நாம் யுத்தத்திற்கு போகும் போது ஆயுதங்களை வெளிக்காட்டிச் செல்வதில்லையே என்று கூறியுள்ளார். இந்தக் கூற்று ஆழமான பல விடயங்களை கொண்டிருக்கின்றன என்று பங்காளிக்கட்சிகள் கூட்டத்தின் நிறைவில் தமக்குள் பேசிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
'யுத்தத்திற்கு செல்பவர்கள் ஆயுதங்களை வெளிக்காட்டிச் செல்வதில்லை' . உள்ளுராட்சி தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி. 'யுத்தத்திற்கு செல்பவர்கள் ஆயுதங்களை வெளிக்காட்டிச் செல்வதில்லை' . உள்ளுராட்சி தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி. Reviewed by Madawala News on 11/22/2017 12:27:00 PM Rating: 5