Kidny

Kidny

எமது இராணுவ நடவடிக்கைகளில் ரோஹிங்ய "பொதுமக்கள் எவரும் கொல்லப்படவில்லை". மியன்மார் இராணுவ அறிக்கை வெளியானது.


மாதக் கணக்காக நீடித்த அண்மைய ரோஹிங்ய முஸ்லிம்கள் மீதான மியன்மார் இராணுவத்தின் தாக்குதல்கள் தொடர்பில் மியன்மார் இராணுவம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில்,

"எமது இராணுவ நடவடிக்கைகளில் ரோஹிங்ய "பொதுமக்கள் எவரும் கொல்லப்படவில்லை" என தெரிவித்துள்ளமையானது நகைப்புக்கிடமாக உள்ளது..

 என மனித உரிமைகள் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மியன்மார் இராணுவத்திற்கு எதிராக தமது விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என மனித உரிமைகள் அமைப்பு கோரியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 25 ஆம் திகதி முதல் மியன்மார் இராணுவத்தினரால் கட்டவிழ்த்து விடப்பட் கொடூர தாக்குதல்களில் இருந்து தப்பித்து 600,000 இற்கும் அதிகமான ரோஹிங்ய முஸ்லிம்கள் அயல்நாடான பங்களாதேஷில் தஞ்சம் புகுந்தனர்.

இது தொடர்பில் அண்மையில், அறிக்கை வெளியிட்டுள்ள மியன்மார் இராணுவம் "எமது தாக்குதலில் பொதுமக்கள் எவரும் கொல்லப்படவில்லை, 376 தீவிரவாதிகள் மாத்திரமே கொல்லப்பட்டனர்" என தெரிவித்துள்ளது.

எமது இராணுவ நடவடிக்கைகளில் ரோஹிங்ய "பொதுமக்கள் எவரும் கொல்லப்படவில்லை". மியன்மார் இராணுவ அறிக்கை வெளியானது. எமது இராணுவ நடவடிக்கைகளில் ரோஹிங்ய "பொதுமக்கள் எவரும் கொல்லப்படவில்லை". மியன்மார் இராணுவ அறிக்கை வெளியானது. Reviewed by Madawala News on 11/16/2017 11:59:00 AM Rating: 5