Kidny

Kidny

ஹெம்மாத்தகம பாடசாலை மாணவர்கள் நடுவீதியில் மோதலில் ஈடுபட்ட சம்பவம்.


-எம்.எப்.எம்.பஸிர் -
மாவனெல்லை ஹெம்மாத்தகம பொலிஸ் பிரிவில் உள்ள
முஸ்லிம் பாடசாலை ஒன்றில்
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரத்தில் கற்கும் மாணவக் குழு வொன்றும் அதே பாடசாலையின்
உயர் தரத்தில் கற்கும் மாணவக் குழுவொன்றும் நடு வீதியில் மோதலில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.


நேற்று முன் தினம் மாலை இந்த மோதல் சம்பவம் இடம் பெற்றுள்ளதாகவும், இதன் போது இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பில் ஐந்து மாணவர் களை நேற்று காலை கைது செய்ததாக பொலிஸார் தெரி வித்தனர்.


இந் நிலையில் குறித்த ஐந்து மாணவர்களும் நேற்று பிற் பகல் மாவனெல்லை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதுடன் இதன்போது அவர்கள் தலா ஐயாயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையிலும் செல்ல நீதிவான் அனுமதித்துள்ளார்.

இது தொடர்பிலான வழக்கு மீள அடுத்த வருடம் ஜனவரி மாதம் 23 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்ப டவுள்ளது.

நேற்று முன் தினம் மாலை குறித்த மாணவக் குழுக்கள் நடு வீதியில் மோதிக்கொண் டுள்ளமை தொடர்பில் காயமடைந்த இருவர் வைத் தியசாலையில் அனுமதிக்கப்பட் டதையடுத்து ஹெம்மாத்தகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஹெம்மாத்தகம பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஷோக பண் டார தலைமையிலான குழு வினர் விசாரணைகளை நடாத் திய நிலையில், மோதலுடன் தொடர்புடைய ஐந்து மாணவர் களை நேற்று கைது செய்தனர்.

இதன்போது பொலிஸாரின் விசாரணைகளில், இரு மாணவக் குழுக்களிடையே நிலவிய நீண்ட பகைமை மோதலுக்கு காரணம் என தெரி
யவந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

எவ்வாறாயினும் பாடசாலையில் ஒழுக்கம் தொடர்பில் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் உயர் தர வகுப்பு மாணவர்கள், சாதாரண தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலருக்கு விடுத்த கண்டிப்புக்கள் மற்றும் எச்ச ரிக்கைகள் தொடர்பிலேயே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரி யவந்ததாக விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதிலிருந்து ஆரம்பித்துள்ள பகைமை பாடசாலைக்கு வெளியே குழு மோதலாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஹெம்மாத்தகம பாடசாலை மாணவர்கள் நடுவீதியில் மோதலில் ஈடுபட்ட சம்பவம். ஹெம்மாத்தகம பாடசாலை மாணவர்கள்  நடுவீதியில் மோதலில் ஈடுபட்ட சம்பவம். Reviewed by Madawala News on 11/15/2017 10:58:00 AM Rating: 5