Kidny

Kidny

மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஏற்பட்ட கதி தான் மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஏற்பட போகின்றது.


(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) 
அம்பாந்தோட்டையில் சர்வதேச கிரிக் கெட் மைதானம் அமைத்ததை போன்று தற்போது
பொலனறுவையிலும் மைதானம் அமைக்கப் போகின்றார்கள்.

இதனால் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஏற்பட்ட கதிதான் மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஏற்படப் போகின்றது. இது தொடர்பில் ஜனாதிபதி யுடன் பேசவுள்ளேன்.

மேலும் யாழ்ப்பா ணத்திலும் சர்வதேச மைதானமொன்றை அமைக்க திட்டமிட்டுள்ளனர். தற்போதைக்கு சர்வதேச மைதானங்கள் தேவையில்லை. அதற்குப் பதிலாக பாடசாலை மாணவர் மட்டத்திலான மைதானங்களே தேவையாக உள்ளன என பெற்றோலியத் துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க சபை யில் தெரிவித்தார்.


தற்போது ஆசிய கிரிக்கெட் கவுன்சிலை இலங்கைக்கு கொண்டு வந்துள்ளனர். இதற்கான செலவுகளை இலங்கை கிரிக்கெட் நிறு வனமே செலவிட்டு வருகின்றது.

மேலும் கடந்த வருடம் 42 வீரர்களை அணிக்கு சேர்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கி ழமை 2018 ஆம் ஆண்டுக்கான வரவு-செல வுத்திட்டத்தில் கல்வி,விளையாட்டு, உள் நாட்டு அலுவல்கள், கலாசார அபிவிருத்தி அமைச்சுகளுக்கான ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் உரையாற்றுகையில்,
தற்போது பாடசாலை மட்டத்தில் கிரிக் கெட் விளையாட்டு போட்டியை பலப்படு த்த வேண்டும். இதன்படி முன்னாள் கிரிக் கெட் வீரர்களான முத்தையா முரளிதரன், மஹேல ஜயவர்தன போன்றோர் நல்ல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வரு கின்றனர்.

தற்போது இலங்கை அணி டெஸ்ட் தர வரிசையில் நான்காம் இடத்தில் இருந்து ஆறாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.


அதேபோன்று ஒரு நாள் மற்றும் இருபது போட்டிகளிலும் வீழ்ச்சி கண்டுள்ளது. அதேபோன்று கிரிக்கெட் நிறுவனத்தின் அசமந்த போக்கினால் கடந்த வரு டத்தில் மாத்திரம் 42 பேர் அணிக்கு இணைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி கிரிக்கெட் நிறுவனம் எந்தவொரு எதிர்கால நோக்குகள் அற்ற வகையில் செயற் பட்டு வருகின்றது.

 அத்துடன் இலங்கை அணியின் தெரிவுக் குழு தலைவர் போட்டி நடுவராக மாறியுள்ளார். தற்போது தேசிய அணிக்கு இலகுவாக இணையக்கூடியதாக உள்ளது.

இலங்கை மகளிர் அணியின் நிலைமையும் இவ்வாறே காணப்படுகின்றது. தற்போது ஆசிய கிரிக்கெட் கவுன்சிலை இலங்கைக்குக் கொண்டு வந்துள்ளனர். எனினும் இதற்கான செலவுகளை இல ங்கை கிரிக்கெட் நிறுவனமே செலவிட்டு வருகின்றது.

அம்பாந்தோட்டையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைத்ததை போன்று தற்போது பொலனறுவையிலும் மைதானம் அமைக்கப்போகின்றார்கள்.
இதனால் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஏற்பட்ட கதி தான் மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஏற் பட போகின்றது.

இது தொடர்பில் ஜனாதி பதியுடன் பேசவுள்ளேன். மேலும் யாழ்ப் பாணத்திலும் சர்வதேச மைதானமொன்றை அமைக்க திட்டமிட்டுள்ளனர். தற்போ தைக்கு சர்வதேச மைதானங்கள் தேவை யில்லை. அதற்குப் பதிலாக பாடசாலை மாணவர் மட்டத்திலான மைதானங்களே தற்போது தேவையாக உள்ளது. அத்துடன் பட்மின்டன் விளையாட்டும் தடைசெய்யப்பட்டுள்ளது.

எனவே இது தொடர்பிலான விசாரணைகளை துரிதமாக நடத்துங்கள் கிரிக்கெட் துறையை சரியாக வழிநடத்தாவிடின் உலக கிண்ண போட் டியில் பாரிய சிக்கலுக்கும் வீழ்ச்சிக்கும் உள் ளாக வேண்டி ஏற்படும் என்றார்.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஏற்பட்ட கதி தான் மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஏற்பட போகின்றது. மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஏற்பட்ட கதி தான் மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஏற்பட போகின்றது. Reviewed by Madawala News on 11/24/2017 02:44:00 PM Rating: 5