Kidny

Kidny

சு.கவுடன் இணைந்து போட்டியிட நிபந்தனையாக, பிரதமர் பதவியை கோரவில்லை.


எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்காக, பிரதமர் பதவியை வழங்குமாறு தாங்கள் நிபந்தனையாக கோரவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன.

இதற்காக இரண்டு தரப்பிலும் மூவர் அடங்கிய குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் இருந்து சிறிலங்கா சுதந்திர கட்சி விலக வேண்டும் என்ற நிபந்தனை முன்வைக்கப்பட்டுள்ளதே தவிர, பிரதமர் பதவியை கோரவில்லை என்று மகிந்த கூறியுள்ளார்.

சு.கவுடன் இணைந்து போட்டியிட நிபந்தனையாக, பிரதமர் பதவியை கோரவில்லை. சு.கவுடன் இணைந்து போட்டியிட நிபந்தனையாக,  பிரதமர் பதவியை கோரவில்லை. Reviewed by Madawala News on 11/24/2017 10:22:00 AM Rating: 5