Kidny

Kidny

(வீடியோ இணைப்பு) நேற்று இரவு காலி பகுதியில் இடம்பெற்ற இரு சம்பவங்கள்.



காலி, கிந்தோட்டை பகுதிகளில் வன்முறை அடக்கப்பட்டு சுமுக நிலை ஏற்படுத்தப்பட்டுவரும் நிலையில் முஸ்லிம்களுக்கு எதிராக இரு சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

இரவு 7 மணியளவில் பள்ளிவாசல் மீது பெற்றோல் பாம் வீச்சு!

ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளையிலும் இலங்கையில் காலி, கிந்தோட்டை பள்ளிவாசல் ஒன்றின் மீது பெற்றோல் பாம் வீசப்பட்டுள்ளது.

சுமார் 113 வருட பழமைவாய்ந்த கிந்தோட்ட மீரான் பள்ளிவாசல் மீதே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மோட்டர் சைக்கிளில் வந்த இரு நபர்களினால் வீசப்பட்ட இந்த பெற்றோல் பாம் பள்ளிவாசலின் வளாகத்தில் வீழ்ந்ததால் பள்ளிவாசலுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என தெரியவருகிறது.

அடுத்ததாக 
தும்பு தொழிற்சாலை பற்றி எரிந்தது

காலி கட்டுகொட, நுகெதுவை பகுதியிலுள்ள தும்பு தொழிற்சாலை ஒன்றின் மீது இன்று அதிகாலை தீ வைக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்!

முஸ்லிம் நபருக்கு சொந்தமான இந்த தும்பு தொழிற்சாலை மீது இன்று அதிகாலை ஒருமணியளவில் தீ வைக்கப்பட்டதாகவும் பின்னர் பிரதேச வாசிகளால் தீ அணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

குறிப்பிட்ட சம்பவங்களை கீழுள்ள வீடியோக்களில் காணலாம்
-அல்மஷூறா மடவளை நியூஸ்-
(வீடியோ இணைப்பு) நேற்று இரவு காலி பகுதியில் இடம்பெற்ற இரு சம்பவங்கள். (வீடியோ இணைப்பு) நேற்று இரவு காலி பகுதியில் இடம்பெற்ற இரு சம்பவங்கள். Reviewed by Madawala News on 11/19/2017 08:26:00 AM Rating: 5