Kidny

Kidny

நான் ஒரு போதும் மஹிந்தவுடன் இணைய மாட்டேன். சந்திக்கவும் மாட்டேன். ஜனாதிபதி.



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் நடைபெறுமென எதிர்பார்க்கப்பட்ட சந்திப்பு இடம்பெறாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.



இன்னாள், முன்னாள் ஜனாதிபதிகளை இணைக்கும் முயற்சியில் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலர் கடும் முயற்சி எடுத்து வருகின்றனர். எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க தயாராக இல்லை எனத் தெரிவித்திருந்தார்.



இந்நிலையில், அண்மையில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியுடனான சந்திப்பில் சில அமைச்சர்கள் மஹிந்தவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவீர்களா என வினவியதற்கு, தான் ஒருபோதும் மஹிந்தவுடன் இணைய மாட்டேன் எனப் பதிலளித்துள்ளார்.

நான் ஒரு போதும் மஹிந்தவுடன் இணைய மாட்டேன். சந்திக்கவும் மாட்டேன். ஜனாதிபதி. நான் ஒரு போதும் மஹிந்தவுடன் இணைய மாட்டேன். சந்திக்கவும் மாட்டேன். ஜனாதிபதி. Reviewed by Madawala News on 11/20/2017 07:33:00 PM Rating: 5