Kidny

Kidny

இவ்வாறு பெற்றோல் நெருக்கடி ஏற்பட கடந்த அரசாங்கமே காரணம்.


கடந்த அரசாங்கத்தால் எரிபொருளை சேமித்து வைப்பதற்கான களஞ்சியசாலைகளை நிர்மாணிக்க முடியுமாக இருந்தும், ஏன் நிர்மாணிக்கவில்லை என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,

அன்று தரம் குறைந்த எரிபொருளை கொண்டு வந்து விநியோகித்ததனால் வாகனங்கள் இடைநடுவில் இயங்காமல் நிற்கும் நிலை ஏற்பட்டது. இந்த சம்பவங்கள் அன்று மூடி மறைக்கப்பட்டன. இப்போது அவ்வாறில்லை. தரம் குறைந்த எரிபொருளை நிராகரித்ததால் சற்று நெருக்கடி நிலை தோன்றியுள்ளது.

அதேபோல் எரிபொருளை களஞ்சியப்படுத்தி வைப்பதில் எமக்கு பிரச்சினை இருக்கின்றது. ஏன் கடந்த அரசாங்கத்தால் எரிபொருள் களஞ்சியசாலைகள் நிர்மாணிக்கப்படவில்லை. கடந்த காலத்தில் இதைவிட அதிகமான எரிபொருள் களஞ்சியசாலைகளை நிர்மாணிக்க முடியுமாக இருந்தது.

கிரிக்கட் விளையாட முடியாத மைதானங்களையும், விமானங்கள் தரையிறங்காத விமான நிலையங்களையும், கப்பல் வராத துறைமுகங்களையும் கட்டிய கடந்த அரசாங்கம், நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்ற எரிபொருளை, களஞ்சியப்படுத்துவதற்கான தாங்கிகளை கட்டவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

இந்த அரசாங்கத்தில் சில குறைபாடுகள் இருந்தாலும், தீர்மானங்கள் மேற்கொள்வதில் தாமதம் இருந்தாலும் அனைத்து விடயங்களிலும் சரியான முறையொன்று கடைபிடிக்கப்படுகின்றது. என்ன விடயங்கள் இடம்பெற்றாலும் மறுநாள் ஊடகங்கள் ஊடாக அறிந்து கொள்ள முடிகின்றது.

இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உரையாற்றினார்.

இவ்வாறு பெற்றோல் நெருக்கடி ஏற்பட கடந்த அரசாங்கமே காரணம். இவ்வாறு  பெற்றோல் நெருக்கடி ஏற்பட கடந்த அரசாங்கமே காரணம். Reviewed by Madawala News on 11/08/2017 03:08:00 PM Rating: 5