Kidny

Kidny

மீண்டும் ஏவுகணை ஒன்றை செலுத்தியது வட கொரியா.



வடகொரியா புதிய பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியுள்ளதாக தென் கொரியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தென் பியாங்யாங் பிராந்தியத்தில் பியாங்யாங்கிலிருந்து கிழக்கு நோக்கி புதிய பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்று ஏவப்பட்டதாக தென்கொரியா ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால், அந்த புதிய பாலிஸ்டிக் ஏவுகணை எவ்வளவு தூரம் செல்லக்கூடிய திறன் பெற்றது என்பது தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும், ஏற்கனவே ஏவப்பட்ட ஏவுகணைகளைப் போன்று இந்த ஏவுகணையும் ஜப்பான் மீது பறந்து சென்றதா? அல்லது வேறு திசையில் ஏவப்பட்டதா என்பது தெளிவாக தெரியவில்லை.

இந்த ஆண்டு வட கொரியா பல ஏவுகணைகளை ஏவியுள்ளது. இதில், கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஏவப்பட்டுள்ள புதிய பாலிஸ்டிக் ஏவுகணை தொடர்பாக அமெரிக்கா மற்றும் தென் கொரியா அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் என்று தென் கொரிய ராணுவ தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியது உண்மைதான் என பென்டகன் செய்தி தொடர்பாளர் கலோனல் ராபர்ட் மேனிங் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


கலோனல் ராபர்ட் மேனிங் வெளியிட்ட அறிக்கையில், நேற்று மதியம் 1.30 மணிக்கு வட கொரியா ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. ஏவுகணை சோதனை தொடர்பாக மேலும் கூடுதல் விவரங்களை திரட்டி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

மீண்டும் ஏவுகணை ஒன்றை செலுத்தியது வட கொரியா. மீண்டும் ஏவுகணை ஒன்றை செலுத்தியது வட கொரியா. Reviewed by Madawala News on 11/29/2017 07:26:00 AM Rating: 5