Kidny

Kidny

சட்டவிரோத சூது..., பணத்துடன் சிக்கிய அறுவர்.


(ஹஸ்பர் ஏ ஹலீம்)

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிகிந்தபுரவில் வீடு ஒன்றினுள் பணத்துக்கு சட்டவிரோதமான முறையில் சூது விளையாடிய அறுவரை நேற்று(27) குறிப்பிட்ட தொகை பணத்துடன் திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளதாக பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ஜனோசன் தெரிவித்தார்.

பல நாட்களாக வீடு ஒன்றினுள் சூது விளையாடப்பட்டு வருவதாக திருகோணமலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியகட்சகர் ஜகத் சந்ரகுமாரவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டது அதனைத் தொடர்ந்து சுற்றிவலைப்பு மேற்கொண்டபோது குறித்த பகுதியில்அறுவர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.கைது செய்யப்பட்டவர்கள் .

லொவ்லேன்,பாரதிபுரம்,ஆண்டாங்குள ம்,சர்தாபுரம்,மிகிந்தபுர பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.  48,22,26,34,49,49 ஆகிய வயதினரே இவ்வாறு குறித்த நபரொருவரின் கைதுசெய்யப்பட்ட அறுவரில் ஒருவரான மிகிந்தபுர சொந்தமான வீட்டிலேயே சுற்றிவலைப்பில் கைது செய்யப்பட்டதாகவும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.


இச் சுற்றிவலைப்பில் எஸ்.ஐ.ஜனோசன்,தௌபீக் 53776,அதுகோரள 12793,சம்பத் 13675,உடகெதர ஜயசிங்க 80836,விஜயமுனி போன்ற பொலிஸ் குழுவினரின் முயற்சியுடன் கைது இடம்பெற்றதாகவும் பொறுப்பதிகாரி ஜனோசன் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட அறுவரையும் குறித்த பணம்,படுக்கை விரிப்பு,சூது பட்டைகளையும் உப்புவெளி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் குறித்த திகதியில் ஆஜராகுமாறும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.(பொலிஸ் அதிகாரிகள் குறித்த தொகை பணத்துடன் படத்தில் நிற்பதைக் காணலாம்)
சட்டவிரோத சூது..., பணத்துடன் சிக்கிய அறுவர். சட்டவிரோத சூது..., பணத்துடன் சிக்கிய அறுவர். Reviewed by Madawala News on 11/28/2017 02:51:00 PM Rating: 5