Kidny

Kidny

பள்ளியில் பல்சர் மோட்டர் சைக்கிளை திருடிய நபர் சிக்கினார்.


கொள்ளைச்சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையதாக தெரிவித்து இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார் .

கைது செய்யப்பட்டவர் ஓட்டமாவடியை சேர்ந்த 18 வயது இளைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜுன் மாதம் 26 ஆம் தகிதி ஏறாவூர் பகுதியில் தொழுகைக்காக வருகை தந்த ஒருவர் மோட்டர் சைக்கிளை  பள்ளிவாசலுக்கு வெளியே நிறுத்தி விட்டு தொழுகைக்கு சென்றுள்ளார்.

இதன்போது சுமார் 10 நிமிட இடைவெளியில் குறிதத மோ. சைக்கிள்   கொள்ளையிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில்  உரிமையாளரான 30 வயதுடைய அச்சி முஹம்மது முஹம்மது றாபி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

BBH 7753 என்ற இலக்க தகட்டினை கொண்ட பல்சர் ரக மோ. சைக்கிளே காணாமல் போனதாக அவர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து விசாரரணைகளை ஆரம்பித்த காவல் துறையினர் சி சி டீ வி காணொளி பதிவு கருவியின் உதவியுடன் ஓட்டமாவடியை சேர்ந்த இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளியில் பல்சர் மோட்டர் சைக்கிளை திருடிய நபர் சிக்கினார்.  பள்ளியில் பல்சர் மோட்டர் சைக்கிளை திருடிய நபர் சிக்கினார். Reviewed by Madawala News on 11/01/2017 12:02:00 PM Rating: 5