Kidny

Kidny

ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் அச்­சு­றுத்­தலில் இருந்து இலங்கை விடு­பட்­டு விட்டது.


ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் அச்­சு­றுத்­தலில் இருந்து இலங்கை விடு­பட்­டுள்­ள­தா­கவும்,  அந்த தீவி­ர­வாத
அமைப்பின் அச்­சு­றுத்­த­லுக்கு ஆளா­காத வகையில் பாது­காப்பு கட்­ட­மைப்பு பல­மாக உள்­ள­தா­கவும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர தெரி­வித் தார்.

பொலிஸ் தலை­மை­ய­கத்தில் நேற்று இடம்­பெற்ற விசேட நிகழ்­வொன்றின் பின் னர் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுடன் உரை­யாடும் போதே பொலிஸ் மா அதிபர் இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் தற்­போது தீவி­ர­வாதம், மத, இன­வாதம் இல்­லாமல் ஆக்­கப்பட்­டுள்­ள­து. அதனால் சர்­வ­தேச நிகழ்­வு­களை பொறுப்­பேற்கும் அள­வுக்கு அங்­கீ­காரம் கிடைக்கப் பெற்­றுள்­ள­து.

2016 ஆம் ஆண்டில் இருந்து பல சர்­வ­தேச மாநா­டுகள், கருத்­தரங்­கு­களை நடத்தும் வாய்ப்­புக்கள் எமக்கு கிடைத்­தன. சர்­வ­தேச பொலிஸ் மற்றும் ஐக்கிய நாடுகள் சார்ந்த நிகழ்­வு­களை நாம் ஏற்­பாடு செய்ய கிடைத்­த­மை­யா­னது எமது நாட்டில் நிலவும் பயங்­க­ர­வாத அச்­சு­றுத்தலற்ற சூழல் இன, மத­வா­தங்களற்ற நிலவரம் ஆகி­ய­வற்­றினை அடிப்­ப­டை­யாகக் கொண்டு கிடைத்­த­தா கும்.

எனவே இந்தச் சூழலை தொடர்ந்தும் பாது­காக்க பொலிஸார் நட­வ­டிக்கை எடுத்­ துள்­ளனர். சர்­வ­தேச ஐ.எஸ். தீவி­ர­வாதிக ளின் அச்சுறுத்தலில் இருந்து நாட்டை முற்றுமுழுதாக பாதுகாக்க இந் நடவடி க்கை ஊடாக முடிந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் அச்­சு­றுத்­தலில் இருந்து இலங்கை விடு­பட்­டு விட்டது. ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் அச்­சு­றுத்­தலில் இருந்து இலங்கை விடு­பட்­டு விட்டது. Reviewed by Madawala News on 11/15/2017 11:34:00 AM Rating: 5