Kidny

Kidny

(படங்கள்) அதிபர் தாக்கப்பட்டதால் மாணவர்கள் ஆர்ப்பாட்டம். # கெலிஓய பிரதேசத்தில்.

-ஜே.எம். ஹபீஸ்-
கம்பளை கலுகமுவ முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் (2.11.2017) பாடசாலைக்கு வரும் வழியில்
கடத்திச் செல்லப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டு கம்பளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை கண்டித்து  மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கம்பளை கெலிஓயா, கலுகமுவ முஸ்லிம் மகாவித்தியாலய அதிபர் அப்துர் ரஸாக் என்பவர் வியாழக் கிழமை காலை பாடசாலைக்கு வரும் வழியில் முச்சக்கரவண்டியில் வந்த நபர் அவரை ஏறும்படி கூறி பாடசாலையில் விடுவதாகக் கூறிஏற்றியுள்ளார்.

பின்னர் அதே முச்சக்கர வண்டியில் அவர் இறக்கப்படாது எடுத்துச் செல்லப்பட்டு மறைவான ஒரு இடத்தில் வைத்து கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.

துச்சக்கரவண்டியின் சாரதியே இவ்வாறு அவரை சலமாரியாகத் தாக்கியுள்ளார்.போத்தல் ஒன்றை உடைத்து அவரைக் கொலை செய்ய முயற்சித்த வேலை அவர் தப்பி வந்ததாக பேராதனைப் பொலீசாருக்கு வாக்குமூலமளித்துள்ளார்.

பின்னர் காயமடைந்த அதிபர் கம்பளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிட்சை பெற்று வருகிறார். மாணவர் அனுமதி தொடர்பான பிரச்சினையை அடுத்தே சந்தேக நபர் இவரை தாக்கியயுள்ளதாக  சந்தேகிக்கப்படுவதாகப் பொலீசார் தெரிவித்தனர்.

சந்தேகத்தின் பேரில் முச்சக்கர வண்டிச் சாரதியை பேராதனைப் பொலீசார் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன.அதேநேரம் பாடசாலை மாணவர்கள் தமது அதிபர் தாக்கப்பட்டதற்கு நியாயம் கோரி பாடசாலை முன் ஆர்பாட்டம் ஒன்றிலும் ஈடுபட்டனர்.



(படங்கள்) அதிபர் தாக்கப்பட்டதால் மாணவர்கள் ஆர்ப்பாட்டம். # கெலிஓய பிரதேசத்தில். (படங்கள்) அதிபர் தாக்கப்பட்டதால் மாணவர்கள் ஆர்ப்பாட்டம். # கெலிஓய பிரதேசத்தில். Reviewed by Madawala News on 11/02/2017 02:50:00 PM Rating: 5