Kidny

Kidny

கிந்தோட்டை சம்பவம் தொடர்பாக அரசாங்கத்தின் சிவப்பு அறிக்கை வெளியானது .


கிந்தோட்டை சம்பவம் தொடர்பாக அரசாங்கத்தின்  சிவப்பு அறிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி

"நேற்றிரவு கின்தொட்ட பகுதியில் இடம்பெற்ற பதற்றநிலை முற்றுமுழுதாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுள்ளது.  பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு நிலை நாட்டபட்டுள்ளதாக சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இரத்த வெள்ளத்தை ஏற்படுத்த வேண்டாம் எனவும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் விசேட வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் போலிஸ், விசேட அதிரடிப்படை மற்றும் கலவரம் அடக்கும் போலீசார் சம்பவ இடத்துக்கு கொண்டு வரபட்டனர்.
காலை வரை ஊடரங்கும் அமுல் படுத்தபட்டது.

சில அரசியல் குழுக்கள் இந்த சிறு சம்பவத்தை ஊதிப்பெரிதாக்கி அரசியல் குளிர்காய முற்படுவது தொடர்பில் நான் மிக கவனமாக இருக்கிறேன் /

சமூக வலைகளில் பிழையான  வீடியோக்கள் ,  திரிவுபடுத்தப்பட்ட  படங்கள் பகிரபட்டு இதன்  மூலம் மக்கள்  உணர்வுகளை பிழையாக வழிநடத்தும் வேலையும் நடைபெறுகிறது. இதற்கு எதிராக நான் நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன்.அதேபோல் வதந்திகளை பரப்புவதற்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்பேன் என சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க மேலும்  தெரிவித்துள்ளார்.

விபரங்களை கீழுள்ள சிவப்பு அறிக்கையில் காணலாம்.
Image may contain: text
Image may contain: text

கிந்தோட்டை சம்பவம் தொடர்பாக அரசாங்கத்தின் சிவப்பு அறிக்கை வெளியானது . கிந்தோட்டை சம்பவம் தொடர்பாக அரசாங்கத்தின்  சிவப்பு அறிக்கை வெளியானது . Reviewed by Madawala News on 11/18/2017 11:10:00 AM Rating: 5