Kidny

Kidny

வானிலை அவதான நிலையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்தது.


மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு, வானிலை அவதான நிலையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பு, காலி உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் காற்றுடன் கூடிய அடைமழை பெய்து வருவதை அடுத்தே இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மீனவர்களும் கடற்படையினரும் கடலுக்குச் செல்லும் போது கூடிய அவதானத்துடன் இருக்கவேண்டுமென்றும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மோசமான வானிலை, சில நாட்களுக்கு நீடிக்குமென வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.

இதேவேளை, தெற்குக்கான ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருப்பதாக, ரயில்வேத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, இன்று வீசிய கடும் காற்றுக் காரணமாக காலி மாவட்டத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. அங்கு மரங்கள் மு​றிந்து விழுந்துள்ளமையால், சில இடங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
வானிலை அவதான நிலையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்தது. வானிலை அவதான நிலையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்தது. Reviewed by Madawala News on 11/29/2017 10:37:00 PM Rating: 5