Kidny

Kidny

இது மக்கள் மீது சுமையேற்றாத பட்ஜெட்.


“புதிய அணுகுமுறையைக் கொண்ட முற்போக்கான வரவு-செலவுத் திட்டம் இது” என, நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர்,

“சுற்றாடலை பாதுகாத்தல், இயற்கை அனர்த்தங்களின் விளைவுகளை குறைத்தல், மக்களிடையே தொழில் முயற்சியாண்மைகளை ஊக்குவித்தல் என்பவற்றை நோக்கமாகக் கருதி, இந்த வரவு-செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

“சுற்றலாத்துறையை அபிவிருத்திச் செய்வதற்கும் நாட்டின் வருமானத்தை அதிகரிக்கவும் முதலீடு செய்ய வேண்டிய இடங்களை, இந்த வரவு-செலவுத்திட்டம் இனங்கண்டுள்ளது.

“மக்கள் மீது சுமையேற்றாமல் பல முன்மொழிவுகள், இந்த பாதீட்டில் கூறப்பட்டுள்ன.

“இந்த வரவு-செலவுத்திட்டம் வறிய மக்களும் வீடு கிடைக்கவும் அவர்களது வாழ்வாதாரத்தை விருத்தி செய்யவும், என தொடரும் செயற்றிட்டங்களுக்கு சலுகை ரீதியில் மூலதனம் பெற வகை செய்கின்றது” என்று குறிப்பிட்டார்.
இது மக்கள் மீது சுமையேற்றாத பட்ஜெட். இது  மக்கள் மீது சுமையேற்றாத பட்ஜெட். Reviewed by Madawala News on 11/10/2017 04:35:00 PM Rating: 5