Kidny

Kidny

பாதிக்கபட்ட முஸ்லீம்களுக்காக செயலாற்றிய RRT அமைப்பை கலைத்துவிட தீர்மானம்.


முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து இனவாத சக்திகளால் முன்னெடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறைகளின்போது அவற்றை சட்ட ரீதியாக எதிர் கொள்வதில் முன்னின்று பாடுபட்ட முஸ்லிம் சட்டத்தரணிகளைக் கொண்ட ஆர்.ஆர்.ரி. அமைப்பை கலைத்துவிடத் தீர்மானித்துள்ள தாக தெரிய வருகிறது.

ஆர்.ஆர்.ரி. அமைப்புக்கும் அதன் தலைவர் சிரேஷ்ட சட் டத்தரணி சிராஸ் நூர்தீனுக்கு எதிராகவும் முன்னெடுக்கப் பட்டு வரும் அநாமதேய பிரசாரங்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாகவே இத்தீர்மானத்தை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்பட்டுள்ளதாக அவ்வமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் குறித்த தீர்மானத்தை உடனடியாக மீள்பரிசீலனை
செய்யுமாறும் தொடர்ந்தும் முஸ்லிம் சமூகத்தை இனவாத அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கும் வகையில் சட்ட ரீதியான பாதுகாப்பை வழங்க முன்னின்று செயற்படுமாறும் முஸ்லிம் சமூகத்தின் சார்பில் சிவில் சமூக தலைமைகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

.கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற ஆர்.ஆர்.ரி. அமைப்பின் கலந்துரையாடலின்போதே இத் தீர் மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் அவ்வமைப்பின் உறுப்பினரான சட்டத் தரணி ஒருவர் தெரிவித்தார்.


எனினும் குறித்த தீர்மானத்தை உடனடியாக மீள் பரிசீலனை செய்யுமாறும் தொடர்ந்தும் முஸ்லிம் சமூகத்தை இனவாத அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கும் வகையில் சட்ட ரீதியான பாதுகாப்பை வழங்க முன்னின்று செயற்படுமாறும் முஸ்லிம் சமூகத்தின் சார்பில் சிவில் சமூக தலைமைகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.


2014 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஆர்.ஆர்.ரி அமைப்பானது, முஸ்லிம்களை இலக்கு வைத்து இனவாத பிரசாரங்களையும் வன்முறைகளையும் மேற்கொண்ட பெளத்த கடும்போக்கு அமைப்புகளுக்கு எதிராக இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளது.


பெளத்த இனவாத சக்திகளைக் கட் டுப்படுத்துவதில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் போதுமான நடவடிக்கை களை முன்னெடுக்காத சந்தர்ப்பங்களில், ஆர்ஆர்ரி அமைப்பின் சட்டத்தரணிகள் துணிச்சலுடன் முன்வந்து பொலிஸ் நிலையங்களில் இனவாதிகளுக்கு எதிராக முறைப்பாடுகளைப் பதிவு செய்த துடன் நீதிமன்றங்களில் வழக்குகளைத் தாக்கல் செய்தமையும் இங்கு சுட்டிக் காட்டத்தக்கதாகும்.

 இதன் காரணமாக குறித்த இனவாத அமைப்புகளின் முக்கியஸ்தர்களான பெளத்த தேரர்கள் பல வழக்குகளுக்கு முகங்கொடுத்துள்ளதுடன் பலரும் பல தடவைகள் சிறையிலடைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் .

இறுதியாகவும் மியன்மார் அகதிகளுக்கு எதிராக அச்சுறுத்தல் விடுத்த பலர் இன்று வரை விளக்கமறியலில் வைக் கப்பட்டுள்ளமையும் ஆர்.ஆர்.ரி. அமைப் பினர் தாக்கல் செய்த வழக்குகளினாலேயாகும்.

இந் நிலையிலேயே முஸ்லிம் சமூகத் திற்கு சட்ட ரீதியாக பாதுகாப்பையும் தைரியத்தையும் வழங்கும் வகையில் தொடர்ந்தும் ஆர்.ஆர்.ரி. அமைப்பின் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என முஸ்லிம் பிரதிநிதிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

பாதிக்கபட்ட முஸ்லீம்களுக்காக செயலாற்றிய RRT அமைப்பை கலைத்துவிட தீர்மானம். பாதிக்கபட்ட  முஸ்லீம்களுக்காக செயலாற்றிய RRT அமைப்பை கலைத்துவிட தீர்மானம். Reviewed by Madawala News on 11/10/2017 03:09:00 PM Rating: 5