Kidny

Kidny

சாய்ந்தமருது பிரதேச சபைக்கான போராட்டம் தொடர்கிறது.


ஏ.பீ.எம்.அஸீம்.(சாய்ந்தமருதிலிருந்து)

சாய்ந்தமருதுக்கான  உள்ளூராட்சி சபை இலக்கை நோக்கி கடந்த ஒரு மாதமாக இடம்பெற்றுவரும்
போராட்டங்களில் ஒரு அங்கமாக இன்று ஊர் மாட்டு வண்டி உரிமையாளர்  சங்கம் பேரணி ஒன்றை நடாத்தியது.

ஊரிலுள்ள மாட்டுவண்டிகளின் உரிமையாளர்களின் முழுமையான பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இப்பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபை இலக்கை நோக்கிய மக்கள் பணிமனையின் தலைமையில் இடம்பெற்ற இப்பேரணியில் ,பிரதமரின் வாக்கு வெறும் புஷ்வானமா? ஏமாற்றாதே எங்களை ஏமாற்றாதே!
அரசியல் தலைவர்களே எங்கே உங்கள் வாக்குறுதி?

எல்லைப் பிரச்சினையில்லாத எங்கள் ஊருக்கு உள்ளூராட்சி சபையை உடன்வழங்கு.தடுப்புத்துறை அமைச்சரே தடுக்காதே எங்கள் பிரதேச சபையை,

போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை போராட்டத்தில் ஈடுபட்டோர் ஏந்தியிருந்தனர்.

 மாலை 4 மணியளவில் சாய்ந்தமருது பிரதான வீதியில் அமைந்துள்ள ஜும்மா பெரிய பள்ளிவாசல் அருகில் ஆரம்பமாகி சாய்ந்தமருதின் எல்லை வீதிகளினூடாக பேரணியாகச் சென்று மீண்டும் 6.30 மணியளவில் ஜும்மா பெரியபள்ளிவாசலை அடைந்து முடிவுக்கு வந்தது.

இப்போராட்டத்தில் பெரிய பள்ளிவாசல் நிருவாகத் தலைவர் வை.எம்.ஹனீபா உட்பட்ட முக்கியஸ்தர்கள் பலரும்  கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
சாய்ந்தமருது பிரதேச சபைக்கான போராட்டம் தொடர்கிறது. சாய்ந்தமருது பிரதேச சபைக்கான போராட்டம் தொடர்கிறது. Reviewed by Madawala News on 11/25/2017 10:33:00 AM Rating: 5