Kidny

Kidny

ஓரினச் சேர்க்கையும் ஓடியொளியும் ஒழுக்கமும்.


ஏ.பீ.எம்.அஸீம்.

சில வருடங்களுக்கு முன்புவரை வெளியில் பேசுவதற்கு மிகவும் கூச்சப்பட்ட வார்த்தை.பொதுமக்களால் வெளிப்படையாக பேசுவதை அருவறுக்கத்தக்கது என ஒதுக்கிய வார்த்தை.அச்செயலை செய்கின்றவர்களை சமூகமே தள்ளிவைத்து ,இழிவாகப் பேசுகின்றநிலை. இவையனைத்தையும் புரட்டிப்போட்டு ,தனக்கும் திருமணத்தைப் போன்ற   சட்ட அங்கீகாரத்தை சமூகம் தரவேண்டும் என்று "ஓரினச் சேர்க்கை" கோரிநிற்கிறது.

தலைகீழாக மாறிவரும்  கலாச்சாரப்போக்கில் மிருகத்தைவிடக் கேவலமாக நடக்கும்  துர் நடத்தையை இதுவரை 14 நாடுகள்  "நாகரிகத்தின் வளர்ச்சி" என்ற படிநிலைக்குள் உட்புகுத்தி சட்ட அங்கீகாரமும் வழங்கியுள்ளன.இன்னும் சில நாடுகளில் ஓரினச்சேர்க்கையை சட்டபூர்வமாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றுவருகின்றன.

 இலங்கையைப் பொறுத்தமட்டில் பல மதங்களையும்,கலாசாரங்களையும் பின்பற்றுகின்ற ஒரு கட்டுக்கோப்பான சமூகமொன்று  வாழ்ந்துகொண்டிருக்கும் நிலையில் "ஓரினச்சேர்க்கை" என்ற இழிவான நடத்தைகளுக்கு சட்டபூர்வ  அனுமதியை அரசு வழங்கப்போவதாக செய்திகள் வருகிறது.

தற்போது சமூகத்தின் பல மட்டங்களிலும் குறிப்பாக பாடசாலை மாணவர்களிடத்திலும் ஏலவே ஒழுக்கப் பிறழ்ச்சிநிலை அதிகரித்துக்கொண்டு செல்கிறது.இது இலங்கைக்கு பாரிய சவாலாக மாறியுள்ளது. இக்குற்றங்களைத் தடுக்க பல்துறையினராலும்   முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசும்கூட இக்குற்றங்களை ஒழிக்க படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறது.

அப்படியிருக்க , "வேலியில் இருந்த ஓணானை பிடித்து  வேட்டிக்குள் விட்ட கதையாக" அரசு ஓரினச்சேர்க்கைக்கு சட்டபூர்வ  அங்கீகாரம் வழங்க இருப்பது ஆச்சரியமளிக்கிறது.

இலங்கை மக்களைப் பொறுத்தமட்டில் ஏதோவொரு மதத்தை பின்பற்றுபவர்களாகவே வாழ்ந்துவருகின்றனர். அவர்களது மதத்தின் பிரகாரம் ஓரினச்சேர்க்கை போன்ற கூடாவொழுக்கங்கள் அனைத்தும் பாவம் என்றே போதிக்கின்றன.இந்நிலையில் இவ்விழிசெயலை யாருடைய தேவைக்காக அரசு கொண்டுவரப்போகிறது?

இச்சட்டம் அமுல்படுத்தப்படுமானால்  ,இவ்வளவு காலமும் ஒளிந்துகொண்டு செய்த குற்றங்கள் ,சட்டத்தின் பார்வையில் குற்றமற்றதாக மாற்றமடையும்.அதுமட்டுமின்றி இவ்விழிசெயல்களை செய்வதற்கு புதியவர்களும் தூண்டப்படலாம்.குறிப்பாக பாடசாலை மாணவர்கள் இதற்குள் அகப்படக்கூடிய சாத்தியம் அதிகமாகவே உள்ளது.

முக்கியமாக ,இன்று உலகை அச்சுறுத்தக்கூடிய எயிட்ஸ் உள்ளிட்ட பாலியல் நோய்கள் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் குறைவாக காணப்பட்டாலும் இழிசெயலுக்கு சட்ட அங்கீகாரம் கொடுக்கப்பட்டால் பல்மடங்கு பெருகி தேசத்தையே அழித்துவிடும் நிலை ஏற்படும்.

ஓரினச்சேர்க்கை என்பது விபச்சாரத்தைவிட மோசமான செயற்பாடாகும்.இது இயற்கைக்கு முரணானது.இந்தமாதிரி செயற்பாடுகளில் ஈடுபடுவோர் நிச்சயம் மனதளவில் பிறழ்ச்சியுடையவர்களாகவும் , எதிர்மறையான பாலியல் எண்ணங்கொண்டவர்களாகவும் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இப்படிப்பட்டவர்களை சீர்திருத்தம் செய்யாமல் ,புதிதாக ஒருபால் திருமணம் என்ற பெயரில் ஊக்கப்படுத்துவது எதிர்கால சந்ததிகளின் இருப்பையே இல்லாமற்  செய்துவிடும் .

ஓரினச் சேர்க்கையும் ஓடியொளியும் ஒழுக்கமும். ஓரினச் சேர்க்கையும்  ஓடியொளியும் ஒழுக்கமும். Reviewed by Madawala News on 11/30/2017 09:02:00 AM Rating: 5