Kidny

Kidny

சாதாரண தரப்பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களுக்கான மாபெரும் இலவசக் கல்விக் கருத்தரங்கு.. பயன் பெறவும்.


அட்டாளைச்சேனை அபிவிருத்தி சங்கம் மற்றும் CCAS கல்லூரி இணைந்து வழங்கும் 2017
ஆம் ஆண்டு சாதாரண தரப்பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களுக்கான மாபெரும் கல்விக் கருத்தரங்கு.

அகில இலங்கையில் மிகப்பிரபல்யமான ஆசிரியர்களால் கணிதம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்கு இரண்டு நாட்கள் கொண்ட கல்விக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை வெள்ளிக்கிழமை அதாவது 01.12.2017 காலை 8 மணிக்கு கணிதபாடம், கொழும்பு ரோயல் கல்லூரியின் S. சுந்தரலிங்கம் ஆசிரியராலும்

ஞாயிற்றுக்கிழமை அதாவது 03.12.2017 காலை 8 மணிக்கு  விஞ்ஞானப்பாடம்,  கொழும்பு சென் பீட்டர்ஸ் கல்லூரியின் K.K. உதயகுமார் ஆசிரியராலும் கொழும்பு இசிப்பத்தான கல்லூரியின் K. ஹமாமுடீன் ஆசிரியராலும் கற்பிக்கப்படவுள்ளது .

கருத்தரங்கின் இறுதியில் எதிர்பார்க்கை வினாத்தாள்களின் தொகுப்பு இரண்டு பாடங்களுக்கும் வழங்கப்படவுள்ளது.

அனைத்து சாதாரணதர மாணவர்களும் தவறாது பங்குபற்றி பயன்பெறுங்கள்.

இடம் :  ADS அலுவலகம், பிரதான வீதி, அட்டாளைச்சேனை, அதாவது பெரிய பள்ளிவாயலுக்கு முன்பாக அமைந்துள்ளது 
சாதாரண தரப்பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களுக்கான மாபெரும் இலவசக் கல்விக் கருத்தரங்கு.. பயன் பெறவும். சாதாரண தரப்பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களுக்கான மாபெரும் இலவசக் கல்விக் கருத்தரங்கு.. பயன் பெறவும். Reviewed by Madawala News on 11/30/2017 01:32:00 PM Rating: 5