Kidny

Kidny

பொலிசாருடன் துப்பாக்கி சமரில் ஈடுபட்ட வாழைக்குலை திருடர்கள். இறந்த சகாவை வீதியில் வீசிவிட்டும் சென்றனர்.


அம்பலாந்தோட்டை, கொக்கல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் வணிகசூரிய கூறியுள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இன்று அதிகாலை 12.05 மணிளவில் இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு பொலிஸார் வீதிப் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை பொலிஸார் நிறுத்துமாறு கூறிய போதிலும் அவர்கள் நிறுத்தாமல் சென்றுள்ளனர்.

இதேவேளை அந்த மோட்டார் சைக்கிளின் பின்னல் வந்த சிறய ரக லொறியை பொலிஸார் நிறுத்த முற்பட்ட போது, அந்த லொறியும் நிறுத்தாமல் பொலிஸாரின் மீது மோதிக்கெண்டு சென்றுள்ள அதேவேளை லொறியில் இருந்து பொலிஸாரை நோக்கி இரண்டு துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டுள்ளன.

இதனையடுத்து பதிலுக்கு அங்கிருந்த பொலிஸார் சரமாரியாக சுட்ட போதிலும் அந்த லொறி நிறுத்தாமல் சென்றுள்ளது.

எவ்வாறாயினும் லொறியில் பயணித்ததாக கூறப்படும் சாரதியும் மற்றுமொறுவரும் இன்று காலை சட்டத்தரணியூடாக அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

வாழைக்குலைத் திருட்டில் ஈடுபட்டுள்ள இவர்கள் அவற்றை லொறியில் எடுத்துச் செல்லும் போதே இந்த சம்பம் இடம்பெற்றுள்ளதாகவும், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் இதன்போது பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபரையும், லொறியையும் துப்பாக்கிச் சண்டை இடம்பெற்ற இடத்திலிருந்து சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில் பாதையின் ஓரமாக விட்டுவிட்டு இவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக இன்று காலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த சந்தேகநபர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பொலிசாருடன் துப்பாக்கி சமரில் ஈடுபட்ட வாழைக்குலை திருடர்கள். இறந்த சகாவை வீதியில் வீசிவிட்டும் சென்றனர். பொலிசாருடன் துப்பாக்கி சமரில் ஈடுபட்ட வாழைக்குலை திருடர்கள். இறந்த சகாவை வீதியில் வீசிவிட்டும் சென்றனர். Reviewed by Madawala News on 11/11/2017 02:17:00 PM Rating: 5