Ad Space Available here

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி எடுத்த முடிவால் கூட்டணி கட்சிகள் அதிருப்தி. பிரிந்து போட்டியிட முடிவு.


ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி அடுத்து நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி தேர்­தலில் கை சின்­னத்தில் போட்­டி­யி­டு­வ­தற்கு தீர்­மா­னித்­துள்­ள­மையால் சிறு மற்றும் சிறு­பான்மைக் கட்­சிகள் அதி­ருப்தி வெளி­யிட்­டுள்­ளன.

இதன் கார­ண­மாக இத்­தனை காலமும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யாக கூட்டு சேர்ந்து போட்­டி­யிட்டு வந்த சிறு மற்றும் சிறு­பான்மை கட்­சிகள் தனித்தும்,  வேறு சில கூட்­டுக்­க­ளிலும் இணைந்து தேர்­த­லுக்கு முகங்­கொ­டுப்­ப­தற்கு தீர்­மா­னித்­துள்­ளன.

முன்­ன­தாக ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னிணில் அங்­கத்­துவம் பெற்­றி­ருந்த சிறு மற்றும் சிறு­பான்மை கட்­சி­க­ளு­ட­னான உற­வு­களை வலுப்­ப­டுத்திக் கொள்­வ­தற்கும் அவற்­றுடன் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­களை மீளப்­பு­திப்­பித்­துக்­கொ­ளளும் நோக்­கு­டனும் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யா­னது அக்­கட்­சியின் தலை­வ­ரான ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் முக்­கிய சந்­திப்­பொன்றை அண்­மையில் நடத்­தி­யி­ருந்­தது.

இதன்­போது முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான அணி­யினர் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யி­லி­ருந்து விலகி நிற்­கின்ற நிலையில் அடுத்­து­வரும் தேர்­தல்­க­ளுக்கு முகங்­கொ­டுக்கும் போது சிறு மற்றும் சிறு­பான்மை அர­சியல் கட்­சிகள் அனைத்­தையும் இணைத்­துக்­கொண்டு பய­ணிப்­பது குறித்தும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டி­ருந்­தது. அதன்­போது அடுத்த தேர்­தல்­களில் எந்தச் சின்­னத்தில் போட்­டி­யி­டு­வது என்­பது குறித்தும் கவனம் செலுத்­தப்­பட்­டது.

இதன்­போது ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் சின்­ன­மான கைச் சின்­னத்­தி­லேயே கள­மி­றங்­கு­வது என்று ஜனா­தி­பதி சுதந்­தி­ர­கட்சி செய­லாளர் உள்­ளிட்­ட­வர்­களால் கூறப்­பட்­டது. எனினும் சிறு­பான்மை கட்­சி­களின் பிர­தி­நி­திகள் கை சின்னம் தொடர்பில் தமிழ் மக்­க­ளி­டத்தில் காணப்­ப­டு­கின்ற எதிர்­ம­றை­யான விட­யத்­தினை சுட்­டிக்­காட்­டி­னார்கள்.

குறிப்­பா­க­பண்­டா­ர­நா­யக்க தனிச்­சிங்­களச் சட்­டத்­தினைக் கொண்ட நபர் என்ற எண்ணம் இன்றும் இருக்­கையில் அவர் பயன்­ப­டுத்­திய இச்­சின்­னத்­தினை மீளவும் கொண்­டு­வ­ரு­வ­தா­னது பழைய விட­யங்­களை மீள நினைவு படுத்­து­வது போன்­றா­கி­விடும். ஆகவே தயவு செய்த இச்­சின்­னத்­தினைக் கைவிட வேண்டும் என்று சிறு­பான்மை தரப்­புக்கள் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தன. இச்­ச­ம­யத்தில் அந்த விட­யத்­தினை ஏற்­றுக்­கொண்ட கட்­சியின் செய­லாளர் துமிந்த திஸா­நா­யக்க, முன்­ன­ணியின் செய­லாளர் மகிந்த அம­ர­வீர ஆகியோர் வெற்­றி­லையை அல்­லது கதி­ரையை பயன்­ப­டுத்த முடியும் என்று கூறி இணக்­கப்­பாட்­டினை எட்­டி­யி­ருந்­தனர்.

இவ்­வா­றான நிலையில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை முதல் சிறு மற்றும் சிறு­பான்மை கட்­சி­க­ளுடன் அடுத்த சுற்றுப் பேச்­சுக்­களை ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி ஆரம்­பித்­துள்­ளது. குறிப்­பாக ஈழ­மக்கள் ஜன­நா­யக கட்சி, ஜன­நா­யக மக்கள் காங்­கிரஸ், இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ், தேசிய காங்­கிரஸ் உள்­ளிட்ட பல கட்­சி­க­ளுடன் இந்தப் பேச்­சு­வார்த்­தைகள் தொட­ரலாம் என எதிர்ப்­பாக்­கப்­பட்­டு­கின்­றன.

ஆனால் தற்­போது கை சின்­னத்­தி­லேயே போட்­டி­யி­டு­வ­தாக ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி உறு­தி­பட அறி­வித்­துள்­ள­மையால் சிறு மற்றும் சிறு­பான்மை கட்­சிகள் ஆகக் குறைந்­தது ஸ்ரீலங்கா சுதந்­தி­ர­கட்­சி­யுடன் ஒரு சில இடங்­க­ளி­லா­வது இணைந்து போட்­டி­யி­டு­வது என்ற நிலைப்­பாட்­டினைக் கூட மாற்­றி­யுள்­ளன.

குறிப்­பாக சிறு­பான்மை கட்சிகள் தமது சின்னத்திலேயே தனித்து போட்டியிடுவது இல்லையேல் வேறு சிறு கட்சிகளுடன் இணைந்து கூட்டாக போட்டியிடுவது என்ற நிலைப்பாட்டினை எடுத்துள்ளன.

குறிப்பாக இந்த நிலைப்பாட்டினால் மைத்திரிபால சிறிசேன தலமையிலான சு.க. தரப்பினர் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளதாகவும் மகிந்த தரப்பு அந்த முடிவு தமக்கு நன்மையானதே என்ற நிலையில் அமைதியைப் பேணிவருவதாகவும் மேலும் அறியமுடிகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி எடுத்த முடிவால் கூட்டணி கட்சிகள் அதிருப்தி. பிரிந்து போட்டியிட முடிவு. ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி எடுத்த முடிவால் கூட்டணி கட்சிகள் அதிருப்தி. பிரிந்து போட்டியிட முடிவு. Reviewed by Madawala News on 11/13/2017 10:18:00 AM Rating: 5