Kidny

Kidny

அதிவேக நெடுஞ்சாலை நிர்மான குழியில் விழுந்து சிறுவன் மரணம். பெற்றோர் தேடிய போது கிடைத்த சோக செய்தி.


மாத்தறை, பெலியத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் அதிவேக நெடுஞ்சாலை நெடுஞ்சாலையின் ஒருபகுதியில் வெட்டப்பட்டிருந்த குழிக்குள் தவறி விழுந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெலியத்த மகா வித்தியாலயத்தில் தரம் 7 இல் கல்வி பயின்று வந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

15 அடி ஆழமான குறித்த குழியில் நீர் நிரம்பியிருந்த சமயமே சிறுவன் இவ்வாறு தவறி விழுந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

சமிக ஷெஹான் (12) என்ற சிறுவனை  காணவில்லையென அவனது பெற்றோர் தேடிய போது குறித்த குழியில் இருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிவேக நெடுஞ்சாலை நிர்மான குழியில் விழுந்து சிறுவன் மரணம். பெற்றோர் தேடிய போது கிடைத்த சோக செய்தி. அதிவேக நெடுஞ்சாலை நிர்மான குழியில் விழுந்து சிறுவன் மரணம். பெற்றோர் தேடிய போது கிடைத்த சோக செய்தி. Reviewed by Madawala News on 11/10/2017 05:15:00 PM Rating: 5