Kidny

Kidny

குடி வெறியில் (இலங்கையில்) வீடொன்றின் கூரை ஏறி நித்திரை கொண்ட அமெரிக்க கடற்படை வீரர்.


-அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்-

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் மிகப் பெரிய யுத்தக் கப்பலில் வந்த கடற்படை
வீரர் ஒருவர், வீடொன்றின் கூரை ஏறி நித்திரை கொண்டமை பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது.

கொள்ளுப்பிட்டிய பிரதேசத்திலுள்ள விடுதியொன்றில் அதிகளவில் மதுபானம் அருந்திய நிலையில், அவர் இவ்வாறு உறங்கியுள்ளார்.

விடுதியொன்றில் அதிகமாக மது அருந்திய குறித்த கடற்படை வீரர், கொள்ளுப்பிட்டிய மைல்போஸ் அவனிலுள்ள மரத்தின் மீது ஏறி, வீடொன்றின் கூரையில் நித்திரை கொண்டுள்ளார்.

இதனையடுத்து வீட்டின் உரிமையாளர் கொள்ளுப்பிட்டிய பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து, குறித்த கடற்படை வீரரை வீட்டின் கூரையில் இருந்து இறக்கி, இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டுப் பிரிவின் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இதன்பின்னர், குறித்த கடற்படை வீரரை அமெரிக்க யுத்தக் கப்பலில் வந்த அதிகாரிகளிடம் இலங்கைக் கடற்படையின் கட்டுப்பாட்டு பிரிவினரால் ஓப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்த கடற்படை வீரருக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு கடந்த சனிக்கிழமை அமெரிக்காவின் யுத்தக் கப்பலொன்று கொழும்புத் துறைமுகத்திற்கு வந்தடைந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
குடி வெறியில் (இலங்கையில்) வீடொன்றின் கூரை ஏறி நித்திரை கொண்ட அமெரிக்க கடற்படை வீரர். குடி வெறியில் (இலங்கையில்) வீடொன்றின் கூரை ஏறி நித்திரை கொண்ட அமெரிக்க கடற்படை வீரர். Reviewed by Madawala News on 11/01/2017 09:46:00 PM Rating: 5