Kidny

Kidny

பூமியதிர்வால் உயிரிழந்த ஈரான் - ஈராக் மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.


ஈரான் மற்றும் ஈராக் எல்லைப் பிராந்தியங்களில் ஏற்பட்ட பூமியதிர்வால் உயிரிழந்த மக்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது ஆழ்ந்த அனுதாபத்தை வெளியிட்டுள்ளார்.

'ஈரான் ஈராக் எல்லைப் பிரதேசங்கள் ஏற்பட்ட பூமியதிர்வால் உயிரிழந்த மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதுடன் பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் ஜனாதிபதி தமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.

இந்த பூமியதிர்வால் 207 பேர் பலியானதுடன், சுமார் 2 ஆயிரத்து 500 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பூமியதிர்வால் உயிரிழந்த ஈரான் - ஈராக் மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன். பூமியதிர்வால் உயிரிழந்த ஈரான் - ஈராக் மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன். Reviewed by Madawala News on 11/13/2017 01:54:00 PM Rating: 5