Kidny

Kidny

லெபனானில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு தனது மக்களுக்கு சவுதி, குவைட், பஹ்ரைன், UAE அரசு உத்தரவு!!



லெபனானில் தங்கியுள்ள தனது நாட்டு மக்களை உடனடியாக வெளியேறுமாறு சவுதி மற்றும்   குவைட், பஹ்ரைன், UAE அறிவித்துள்ளது.


சவுதி ஆதரவு பெற்ற லெபனான் பிரதமர் சாத் ஹரிரீ தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக கூறி தனது பதவியை ராஜினாமா செய்தார்


இதனால் லெபனானுக்கும் சவுதிக்கும் இடையே பதற்றம் உருவாகியுள்ளது.

இதற்கிடையில் ஈரான் ஆதரவுடன் செயல்படும்  அமைப்பு ஒன்று ஏமனில் இருந்து ஏவுகனையை ஏவிவருவதாக சவுதி குற்றம்சாட்டியுள்ளது


லெபனானிலும் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனால் சுன்னி முஸ்லிம் ஆதிக்கம் மிகுந்த சவுதி அரேபியாவுக்கும், ஷியா முஸ்லிம் ஆதிக்கம் பெற்ற ஈரானுக்கும் இடையே மோதல் உருவாகும் நிலை உள்ளது.


இதனால் தங்களது நாட்டிற்கு ஆபத்து ஏற்படுமோ என்று பெரும்பாலான லெபனான் குடிமக்கள் அச்சமடைந்துள்ளனர்


இந்நிலையில் லெபலானில் வசிக்கும் சவுதி அரேபியா குடிமக்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறும், சவுதியர்கள் யாரும் அந்த நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று சவுதி அரசு கேட்டு கொண்டுள்ளது.


இதனை அடுத்து தங்கள் நாட்டு மக்களையும் வெளியேறுமாரு குவைத், பஹ்ரைன், UAE ஆகிய நாடுகளும் அறிவித்துள்ளன.

லெபனானில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு தனது மக்களுக்கு சவுதி, குவைட், பஹ்ரைன், UAE அரசு உத்தரவு!! லெபனானில் இருந்து உடனடியாக  வெளியேறுமாறு தனது மக்களுக்கு சவுதி, குவைட், பஹ்ரைன், UAE  அரசு  உத்தரவு!!  Reviewed by Madawala News on 11/10/2017 06:58:00 AM Rating: 5