Kidny

Kidny

கோத்தாப ராஜபக்‌ஷவை கைது செய்வ‌து எதிர் கால‌ இல‌ங்கையில் மிக‌ மோச‌மான‌ உதார‌ண‌மாக‌ அமையும்.



முன்னாள் பாதுகாப்பு செய‌லாள‌ரை கைது செய்வ‌து எதிர் கால‌ இல‌ங்கையில் மிக‌ மோச‌மான‌ உதார‌ண‌மாக‌ அமையும் என‌ உல‌மா க‌ட்சி தெரிவித்துள்ள‌து.

இது ப‌ற்றி உல‌மா க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்த‌தாவ‌து,

இந்த‌ நாட்டின் கொடூர‌ யுத்த‌த்தை முடித்து வைத்த‌வ‌ர்க‌ளில் கோட்டாப‌ய‌ ராஜ‌ப‌க்ஷ‌வும் முக்கிய‌மான‌ ஒருவ‌ர். யுத்த‌ம் முடிந்த‌தால் முத‌லில் ந‌ன்மை பெற்ற‌ சமூக‌ம் என்றால் அது வ‌ட‌க்கு கிழ‌க்கு முஸ்லிம் ச‌மூக‌ம்தான். 

யுத்த‌ம் முடிந்த‌ பின்ன‌ரே கிழ‌க்கில் முஸ்லிம்க‌ளும் த‌மிழ் ம‌க்க‌ளும் த‌ம‌து பிர‌தேச‌ங்க‌ளில் சுத‌ந்திர‌மாக‌ திரிகின்ற‌ன‌ர். யுத்த‌ம் முடிந்த‌த‌ன் கார‌ண‌மாக‌வே சிங்க‌ள‌ ம‌க்க‌ளும் வ‌ட‌க்கு கிழ‌க்குக்கு உல்லாச‌ ப‌ய‌ண‌ங்க‌ளை மேற்கொள்கின்ற‌ன‌ர். 

இவ்வாறு இந்த‌ நாட்டுக்கு பாரிய‌ சேவை செய்த‌ கோட்டாவை கைத் செய்வ‌து எதிர் கால‌த்தில் இல‌ங்கையில் த‌மிழீழ‌ விடுத‌லைப்போராட்ட‌ம் ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட்டால் அத‌ற்கெதிராக‌ போராடும் உறுதியான‌ ம‌னோ நிலையை எந்த‌வொரு சிங்க‌ள‌ ராணுவ‌ அதிகாரியும் பெறாத‌ நிலையை தோற்றுவிக்கும்.

இவ்வாறு புலிப்ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்துக்கெதிராக‌ போராடினால் அர‌சாங்க‌ம் மாறும் ப‌ட்ச‌த்தில் தானும் கோட்டா போல் கைது செய்ய‌ப்ப‌ட‌லாம் என்ற‌ ம‌னோ நிலை அவ‌ருக்கு ஏற்ப‌டுவ‌த‌ன் மூல‌ம் கோட்டாவின் கைது மிக‌ மோச‌மான‌ உதார‌ண‌மாக‌ அமைந்து விடும் என்ப‌தை எச்ச‌ரிக்கிறோம்.

கோட்டாப‌ய‌ ஊழ‌ல் செய்திருந்தால் அத‌னை ஜ‌னாதிப‌தி மைத்திரி த‌லைமையிலான‌ அமைச்ச‌ரவையின் ஸ்ரீ ல‌ங்கா சுத‌ந்திர‌க்க‌ட்சியின் அமைச்ச‌ர்க‌ளை ம‌ட்டும் கொண்ட‌ ஒரு குழு அவ‌ரிட‌ம் விசாரிப்ப‌து சிற‌ந்த‌தாகும். அத‌னை விடுத்து கோட்டாப‌ய‌வை கைது செய்து எதிர்கால‌ இல‌ங்கையின் ஸ்திர‌த்துக்கு ஏற்ற‌து அல்ல‌ என்ப‌தை முஸ்லிம் உல‌மா க‌ட்சி அர‌சுக்கு சொல்கிற‌து.
கோத்தாப ராஜபக்‌ஷவை கைது செய்வ‌து எதிர் கால‌ இல‌ங்கையில் மிக‌ மோச‌மான‌ உதார‌ண‌மாக‌ அமையும். கோத்தாப ராஜபக்‌ஷவை கைது செய்வ‌து எதிர் கால‌ இல‌ங்கையில் மிக‌ மோச‌மான‌ உதார‌ண‌மாக‌ அமையும். Reviewed by Madawala News on 11/29/2017 09:48:00 AM Rating: 5