Kidny

Kidny

வவுனியா அசம்பாவிதம் இனவாதிகளுக்கு தீனிபோடக்கூடாது.


இன்று நள்ளிரவு வவுனியா பஸார் பள்ளிக்குச் சொந்தமான கடைத்தொகுதிகளில் தீ அனர்த்தம் ஒன்று ஏற்பட்டது அறிந்ததே.

ஒரு கடை முற்றாக தீயில் சேதமடைந்தும், ஏனைய இரு கடைகள் பகுதியளவில் சேதமடைந்தும் இருக்கின்றன.

 இவ் அசம்பாவிதத்தை தொடர்ந்து வவுனியா பஸார் பகுதியில் ஒரு வித பதற்றமான நிலையும் ஏற்பட்டிருந்தது. இந் நிலைகளை அவதானித்த வடக்குமாணசபை உறுப்பினர்களான கௌரவ கலாநிதி. ப. சத்தியலிங்கம் (முன்னாள் வடக்குமாகாண சுகாதார அமைச்சர்) மற்றும் கௌரவ அய்யூப் அஸ்மின் அவர்கள் இருவரும் சம்பவம் இடம்பெற்ற களத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்கள்.


அங்கிருந்த வர்த்தகர்களோடும் - பள்ளிவாயல் தலைவர் உட்பட மஸ்ஜித் நிர்வாகத்தினரோடும், பொலிஸாரோடும் மற்றும் வர்த்தக சங்கத்தினரோடும் கலந்துரையாடி நிலமைகளை கேட்டறிந்தனர்.


முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் கடையின் உட்பகுதியிலிருந்தே தீ பரவல் ஆரம்பித்திருக்கின்றது என்றும் - எறியூட்டப்படுவதற்கான இரசாயனப்பதார்த்தங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதற்கு போதிய ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைக்காகவும் - பகுப்பாய்வு நடவடிக்கைகளுக்காகவும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டிருந்தார்கள்.


கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி மேற்படி கடைகளை அகற்றக்கோறி ஒரு சிறு குழப்பவாத குழுவினரால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இக்குழுவினருக்கும் - குறித்த அசம்பாவிதத்திற்கும் தொடர்பு இருக்க முடியும் என அப்பகுதி வர்த்தகர்கள் சந்தேகிக்கின்றார்கள். மேலும் தென்னிலங்கை கிந்தோட்டை பிரதேசத்தில் ஏற்பட்டிருக்கின்ற முஸ்லிம் - சிங்கள இன முறுகளை வடக்கிலும் தோற்றுவிப்பதற்கு தீய சக்திகள் முயன்றிருக்கக்கூடும் என்ற சந்தேகமும் அப்பகுதி மக்களிடத்திலே எழுந்திருக்கின்றது. அல்லது பொலிஸார் குறிப்பிடுவதைப் போல வேறு காரணிகளாலும் இவ் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்க முடியும்.


எது எவ்வாறாயினும் குறித்த அசம்பாவிதத்தின் உண்மைக் காரணிகள் கண்டறியப்பட்டு அவை சட்ட ரீதியாக அனுகப்பட வேண்டும். எவறேனும் செயற்கையாக இவ் அசம்பாவிதத்தை தோற்றிவித்திருந்தால் அவர்கள் சட்டரீதியாக தண்டிக்கப்படவேண்டும். ஆனால் இவற்றை காரணமாக வைத்து இன முரண்பாடொன்றை தோற்றுவிப்பதற்கு எவ்வகையிலும் அனுமதிக்க முடியாது. தீய இனவாத சக்திகளுக்கு தமிழ் - முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக இருந்து பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றார்கள்.


குறித்த பிரதேச வர்த்தகர்களும் , மக்களும் அமைதியாக இருந்து பொலிஸ் விசாரணைகளுக்கு ஒத்துழைப்ப வழங்கி உண்மைகள் கண்டறியப்படுவதற்கு உதவ வேண்டும். அத்தோடு இன நல்லிணக்கத்தை வளர்த்தெடுக்க வேண்டும் என்று வடக்குமாகாணசபை உறுப்பினர்கள் இருவரும் கோறிக்கை விடுத்திருந்தனர்.

தகவல் : எம். எல். லாபிர் 
வவுனியா அசம்பாவிதம் இனவாதிகளுக்கு தீனிபோடக்கூடாது. வவுனியா அசம்பாவிதம் இனவாதிகளுக்கு தீனிபோடக்கூடாது. Reviewed by Madawala News on 11/20/2017 03:05:00 PM Rating: 5