Ad Space Available here

அர்ஜுன ரணதுங்க கூறும் பெற்றோல் கதைகள்... (முழு விபரம்)


ஐ.ஒ.சி தருவித்த தரமற்ற பெற்றோலை பொறுப்பேற்குமாறு பிரதமரோ, அல்லது ஜனா திபதியோ
எனக்கு எந்த அழுத்தமும் வழங்கவில்லை.
அமைச்சு பதவியை விட்டு வீடுசெல்ல நேர்ந்தாலும் தான் அதனை செய்யப்வேதில்லை என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.


பெற்றோல் விநியோகம் சீரான பின்னர் எரிபொருள் பிரச்சினை தொடர்பில் விசாரணை நடத்தி பொறுப்பானவர்களை கண்டறியவுள்ள தாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

23/2 நிலையியற் கட்டளையின் கீழ் தினேஷ் குணவர்தன மற்றும் அநுர குமார திசாநாயக்க ஆகியோர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது:


டீசலில் இன்று வரை எந்த குறைவும் ஏற்படவில்லை. பெற்றோலில் மட்டுமே
குறைவு ஏற்பட்டுள்ளது. நாம் துரதிஷ்டவசமாக சில எரிபொருள் நிரப்பு நிலையங்களை மூடி டீசல் விநியோகத்தையும் நிறுத்தியுள்ளனர்.

முச்சக்கரவண்டி உரிமையாளர்களும் மோட்டார் சைக்கிள் உரிமையாளர் களுமே இதனால் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளனர். அவசர கேள்வி மனு முறையில் கொண்டு வரப்பட்டதாக அநுரகுமார திசாநாயக்க கூறியதை ஏற்க முடியாது.

இது வழமையான முறையில் கொண்டு வரப்பட்ட எரிபொருளாகும். லங்கா ஐ.ஒ.சி. நிறுவனம் ஒக் டோபர்(17)இலங்கைக்கு எரிபொருள் கப்பலொன்றை கொண்டு வந்தது.

இருமுறை ஆய்வு செய்தும் அந்த இருமுறையும் அந்த கப்பலில் உள்ளவை   நிராகரிக்கப்பட்டவில்லை. மூன்றாவது முறையாக அந்த கப்பலை நிராகரிக்க முடிவுசெய்தோம்.

ஏனெனில், கடந்த காலங்களில் தரக்குறைவான எரிபொருள் தருவிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட் டதால் வாகனங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்காக அரசு இழப்பீடுகளை வழங்க வேண்டி ஏற்பட்டிருந்தது.

இருந்தும் , 14 நாட்களுக்கு மேலாக இன்றும் அந்த கப்பல் திருகோண மலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த கப்பலை நிராகரித்த பின்னர் இலங்கை பெற்றோலியக் கூட்டுத் தபானத்தினால் தருவிக்கப்பட் கப்பலொன்று 2 ஆம் மற்றும் 3 ஆம் திகதிக்கிடையில் இலங்கையை வந்தடையவிருந்தது.

எனினும், தொழில்நுட்ப காரணங்களால் இந்த கப்பலுக்கு 7 நாட்கள் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த கப்பல்இன்று (08 இரவாகும் போது கொழும்பை வந்தடையவுள்ளது. நாளை (09) திக தியாகும் போது இந்த எரிபொருள் விநியாக நடவடிக்கைகள் வழமைக்குத்திரும்பும். இந்த பிரச்சினைதீர்ந்ததன் பின்னர்
இப் பிரச்சினை குறித்து ஆராய விசேட குழுவொன்றை நியமிக்
குமாறு, நான் அமைச்சரவை கூட் டத்தின் போது ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் கோரினேன்.


இங்கு நினைத்துப் பார்க்க முடியாத விடயங்களும் இடம்பெறுகின்றன. இதனை பயன்படுத்தி இலாபம் பெற முயற் சிக்கும் அரசியல்வாதிகளும் இருக் கின்றனர். கத்திகரிப்பு பணிகள் 30 அல்லது 31 ஆம் திகதியாகும் போது 3 நாட்க ளுக்கு நிறுத்தப்படும்.

எரிபொருள் விநியோகம் தொடர்பான கணனி கட்டமைப்புமுறைமையும் பல மணித்தி யாலங்களுக்கு நிறுத்தப்படும். இந்த சம்பவங்கள் ஒன்றுக்கொன்று தொடர் புபடும் போது இது இயல்பான சம்பவமாக கருத முடியாது.

இங்கு வரும் கப்பல் இடைநடுவில் 10 மணித்தியாலங்கள் நிறுத்தப் படுகின்றது. இவ்வாறான பல்வேறு சம்பவங்களுக்கு மத்தியில் கப்பல் கால தாமதமாகியுள்ளது.

90 ஆயிரம் மெற்றிக் தொன் பெற்றோலை மட்டுமே எம்மால் இலங்கையில் களஞ்சியப்படுத்த முடியும். எரிபொருள் மாபியா காரணமாக கடந்த காலத்தில் ஒரேயொரு நிறுவ னமே தொடர்ச்சியாக செயற்பட்டு வந்துள்ளது.

இந்த மாபியாவை நிறுத்த அண்மையில் நான் அமைச்சரவை பத்திரமொன்றையும் சமர்ப்பித்தேன். 2500 மெற்றிக் தொன் பெற்றோலே எமக்கு நாளொன்றுக்கு தேவைப்படுகிறது.

எனினும், கடந்த சனிக்கி ழமை நாம் 2866 மெற்றிக் தொன் பெற்றோலை விநியோகம் செய் துள்ளோம். ஞாயிற்றுக்கிழமை 963 மெற்றிக் தொன்னும், திங்கட்கிழமை 623 மெற்றிக்தொன்னும் விநியோகம் செய்யப்பட்டன. இன்று 8 ஆயிரம் மெற்றிக் தொன்னை விநியோகம் செய்ய நடவடிக்கையும் எடுக்கப்பட் டுள்ளது.


எவ்வாறிருப்பினும், ஒரேயொரு தொலைபேசி குறுஞ்செய்தி காரண மாகவே மக்கள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்படுத்தப்பட்டிருந் தது.

இதனால், நாளொன்றுக்கான பெற்றோல் தேவையானது 2500 மெற்றிக் தொன்னில் இருந்து 4700 மெற்றிக் தொன்னாக அதிகரித் துள்ளது.

நவம்பர் மாதம் (09) திகதியாகும் போது இந்த நிலைமையை நிவர்த்தி செய்ய முடியும் . கலன்களில் எரிபொருள் வழங்காதது குறித்து விமல் வீரவனச எம்.பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர்:

மோசடி, ஏமாற்று வியாபார நடவ டிக்கையொன்று முன்னெடுக்கப்படு வதாலே கலன்கள் மற்றும் போத்தல்களுக்கு எரிபொருள் வழங்குவதை நாம் நிறுத்தியுள்ளோம்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கலன்களி லும் போத்தல்களிலும் எரிபொருளை வாங்கிக் சென்று வெளியில் அதிக விலைக்கு விற்கின்றனர் என்றார்.

தரமற்ற பெற்றோலை பொறுப் பேற்குமாறு அமைச்சர் ஒருவர் அழுத்தம் கொடுத்தாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து விமல் வீரவனச எழுப்பியிருந்த கேள்விக்குப்பதில் வழங்கிய அவர்:

 நாட்டுக்கு குந்தகமான எதுவும் நடக்க நான் இடமளிக்க மாட்டேன். இந்த எரிபொருளை விநியோகிக்குமாறு யார் சென்னாலும் நான் அதை நிறைவேற்ற மாட்டேன். அமைச்சர் பதவியை துறந்து நான் வீட்டுக்கு செல்வேன்.

இன்று வரை ஜனாதியதியோ அல்லது பிரதமரோ எனக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவுமில்லை. இதனை நான் பொறுப்பு டன் தெரிவித்து கொள்கிறேன்.

இந்த விசாரணையின் போது யார் இதில் தவறிழைத்தவர், அது எப்படி நிகழ்ந் தது என்பதை கண்டறிய நான் முன்னின்று செயற்படுவேன் என்றார்.

அர்ஜுன ரணதுங்க கூறும் பெற்றோல் கதைகள்... (முழு விபரம்) அர்ஜுன ரணதுங்க கூறும் பெற்றோல் கதைகள்... (முழு விபரம்) Reviewed by Madawala News on 11/08/2017 08:40:00 AM Rating: 5