Kidny

Kidny

எனக்கு 23 - உனக்கு 43 . ஒரு போலிஸ் ரிப்போர்ட். #இலங்கை.


தகாத உறவு காரணமாக, பெண் ஒருவரை அசீட் வீசி கொலை செய்த இளைஞர், சுமார் ஒன்றரை வருடங்களின் பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சீதாவக விஷேட விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய, தலைமறைவாகியிருந்த குறித்த இளைஞர் கடந்த 18ம் திகதி கைதாகியுள்ளார்.

சந்தேகநபர் ஹெடஹெத்த - நாபாவல பகுதியைச் சேர்ந்த 23 வயதான ஒருவராகும்.

கொஸ்கம - பஹல கொஸ்கம பகுதியைச் சேர்ந்த, 43 வயதான பெண் ஒருவருடன் அவர் தகாத உறவில் இருந்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த பெண் இரண்டு பிள்ளைகள், பேரப் பிள்ளைகளையும் கொண்டவர் என்பதோடு, அவரது கணவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.

அத்துடன், கொஸ்கமவில் அப் பெண் அழகு சிகிச்சை நிலையம் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார்.

இந்தநிலையில், சந்தேகநபருடனான உறவை துண்டித்து விட்டு, அந்தப் பெண்மணி பிறிதொரு நபருடன் காதல் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரமுற்ற குறித்த இளைஞர் கடந்த 2016ம் ஆண்டு மே 31ம் திகதி, அப் பெண்ணின் அழகு சிகிச்சை நிலையத்திற்கு சென்று அசீட் வீசியுள்ளார்.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் பலியாகியுள்ளார்.

இதேவேளை, கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனக்கு 23 - உனக்கு 43 . ஒரு போலிஸ் ரிப்போர்ட். #இலங்கை. எனக்கு  23 - உனக்கு 43 . ஒரு  போலிஸ் ரிப்போர்ட். #இலங்கை. Reviewed by Madawala News on 11/20/2017 03:25:00 PM Rating: 5