Kidny

Kidny

வவுனியா பள்ளிவாசல் கடைத் தொகுதி தீ... மின்சார ஒழுக்கே காரணமாக இருக்கலாம் என்று சந்தேகமாக உள்ளது. பொலிஸ் அத்தியட்சகர்.



வவுனியா பள்ளிவாசல் கடைத் தொகுதியில் தீ பரவியமைக்கு மின்சார ஒழுக்கே காரணமாக இருக்கலாம் என வவுனியா மாவட்ட உதவி பொலிஸ் உதவி அத்தியட் சகர் பியசிறி பெனான்டோ தெரி வித்தார்.

வவுனியா நகர பள்ளிவா சல் பகுதியில் அமைந்துள்ள 14 கடைத்தொகுதிகளில் இரண்டு கடைகள் நேற்று அதிகாலை 1.30 மணிக்கு தீயில் எரிந்து நாசமாகி யது.

தீவிபத்து தொடர்பாக வவுனியா மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மேற்கண்ட வாறு தெரிவித்துள்ளார்.


தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், தீவிபத்து தொடர்பாக தகவல் கிடைக்கப்பெற்றவு டன் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் உடனடியாக செயற் பட்டு தீயை அணைத்து பக்கத்து கடைகளுக்கு தீ பரவுவதை தடுத்து
நிறுத்தினர்.

தீயானது கடையின் உள்ளிருந்தே பரவியுள்ளதுடன்
கடையை தீயிட்டு விட்டு ஓடிய தாக கூறப்படும் நபர்களை எவரும் பார்த்ததாக பொலிசில் முறைப்பா டுகள் எதுவும் மேற்கொள்ளப்பட வில்லை.


இருந்தபோதும் வன்னி மாவட்ட பிரதிபொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் பணிப் புரைக்கு அமைவாக விரிவான விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

இத்தீவிபத்து தொடர்பான விசா ரணைகளில் தடவியியல் பொலிஸ் பிரிவு, துப்பறியும் நிபுணத்துவப் பிரிவு மற்றும் புலனாய்வு பிரிவு பொலிசார் களமிறக்கப்பட்டு விரிவான விசாரணைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதுடன் தீ விபத்து நடைபெற்ற கடைகளில் சேகரிக் கப்ட்ட மாதிரிகள் இரசாயன பகுப் பாய்விற்காக கொழும்புக்கு அனுப்ப படவிருப்பதாகவும் வவுனியா மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்கர் மேலும் தெரிவித்தார்.
வவுனியா பள்ளிவாசல் கடைத் தொகுதி தீ... மின்சார ஒழுக்கே காரணமாக இருக்கலாம் என்று சந்தேகமாக உள்ளது. பொலிஸ் அத்தியட்சகர். வவுனியா பள்ளிவாசல் கடைத் தொகுதி தீ... மின்சார ஒழுக்கே காரணமாக இருக்கலாம் என்று சந்தேகமாக உள்ளது. பொலிஸ் அத்தியட்சகர். Reviewed by Madawala News on 11/21/2017 08:41:00 AM Rating: 5