Kidny

Kidny

இலங்கை உட்பட பல நாடுகளில் வாட்ஸ் அப் செயலிழந்தது தொடர்பில் விசாரணை.


குறுந்தகவல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி, உலக வாழ் மக்களின் மனதில் இடம்பிடித்த வாட்ஸ் அப் இன்று சில நிமிடங்கள் செயலிழந்திருந்தது.

இதனால் வாட்ஸ் அப் மூலம் குறுந்தகவல்களை பெற்றுக் கொள்ளவோ, அனுப்பவோ முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறை கண்டறிந்து அதனை உடனடியாக செயற்படுத்துவதற்கு வாட்ஸ் அப் நிறுவனத்தினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.


இலங்கை, சவூதி அரேபியா, இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் என பல நாடுகளில் வாட்ஸ் அப் செயலிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த வாட்ஸ் அப் மென்பொருளை மீள செயற்படுத்துவதற்கு அந்த நிறுவனத்தினர் உடனடியாக செயற்பட்டிருந்தனர்.

சுமார் 200 மில்லியன் பயனாளர்களை கொண்டுள்ள உலகின் பாரிய வலையமைப்பாக இது கருதப்படுகின்றது.

இன்றைய தினம் ஏற்பட்ட சர்ச்சை தொடர்பில் உடனடி விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பேஸ்புக் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் ரொய்டர்ஸ் நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.

8.30 ஜி.எம்.டி நேரத்தில் செயலிழந்த இந்த வாட்ஸ் அப், சுமார் 30 நிமிடங்களில் மீள வழமைக்கு திரும்பியதாக குறிப்பிடப்படுகின்றது.

எவ்வாறாயினும், இந்த சம்பவம் குறித்து வாட்ஸ் அப் நிர்வாகத்தினர் விசாரணைகளை ஆரம்பித்து முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கை உட்பட பல நாடுகளில் வாட்ஸ் அப் செயலிழந்தது தொடர்பில் விசாரணை. இலங்கை உட்பட பல நாடுகளில்  வாட்ஸ் அப் செயலிழந்தது தொடர்பில் விசாரணை. Reviewed by Madawala News on 11/03/2017 06:29:00 PM Rating: 5