Kidny

Kidny

எமது நாட்டிற்கு சுதந்திரம் கிடைப்பதற்காக 1818 இல் வெல்லஸ்ஸ கிளர்ச்சியை ஆரம்பித்தவர்களை உலகறியச்செய்ய நடவடிக்கை.


"எமது நாட்டிற்கு சுதந்திரம் கிடைப்பதற்கான வரலாற்று அடிப்படையை ஏற்படுத்தியவர்கள்
வெல்லஸ்ஸ மக்களாவர். அன்று பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் வாழ்ந்த இலங்கை மக்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்றே வெல்லஸ்ஸவின் மூதாதையர் போராட்டத்தை ஆரம்பித்தார்கள்.

நாட்டிலுள்ள மக்களுக்காக அவ்வாறு போராட்டத்தை ஆரம்பித்தவர்களுக்கு அன்று வீர மரணங்களும், அழிவுகளுமே கிடைத்தன. அன்று காலனியர்கள் இப்பிரதேசத்திற்கு எதிராக மேற்கொண்ட அழிவுகளை இன்றும் காணக்கூடியதாக இருக்கிறது.


இவ்வாறு அழிவுகள் ஏற்படும் என்று தெரிந்தும் மூதாதையர்கள் போராடியது சுதந்திரத்தை விட மேலான ஒன்று இல்லை என்பதை உணர்ந்தே ஆகும். இந்த வெல்லஸ்ஸ நாட்டுக்கு கடன் வைத்ததில்லை.

1818 இல் ஆரம்பித்த வெல்லஸ்ஸ கிளர்ச்சிக்கு அடுத்த வருடத்துடன் 200 வருடங்கள் ஆகின்றன.

இந்த சந்தர்ப்பத்தில் வெல்லஸ்ஸ சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றி நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் மட்டுமன்றி உலகிற்கும் அறிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். வெல்லஸ்ஸ மக்களின் தற்போதை பிரதிநிதியொருவர் என்ற வகையில் அதனை எனது கடமையாகக் கருதுகிறேன்" என்று அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.


அண்மையில் இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகத்தில் இது தொடர்பாக நடைபெற்ற சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

"எமது மாவட்டம் பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவில் உள்ளது. இதற்கான பிரதான காரணியாக வெல்லஸ்ஸ கிளர்ச்சியைக் குறிப்பிடலாம். அதனால் பல கிராமங்கள் அழிக்கப்பட்டன. ஆயினும் இத்தகைய நிலையிலும் இன்று எமது மக்கள் இன்முகத்துடன் இருப்பதைக் காணும் போது பெருமையாக உள்ளது.


என்றாலும் கடந்த காலத்தை மறக்க விடக்கூடாது என்ற நிலையில் அரசு உள்ளது. அதனால் தான் அண்மையில் அரச துரோகிகளின் பட்டியலில் இருந்து வெல்லஸ்ஸ வீரர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.


எதிர்வரும் வருடம் அதன் 200 ஆவது நினைவினை பாரியளவில் கொண்டாடவுள்ளோம். இது சாதாரண கொண்டாட்டமாக இருக்காமல் மக்களை வென்றெடுக்கும் கொண்டாட்டமாக அமைய யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதன் கீழ் வெல்லஸ்ஸ வீரர்களின் பெயரில் வீடமைப்புத்திட்டங்களை உருவாக்க வீடமைப்பு அமைச்சுடன் பேசி வருகிறோம். அத்துடன் கல்வி அமைச்சுடன் பேசி அந்த வரலாறை மாணவர்களுக்காக வழங்க இருக்கிறோம்.

கடந்த காலத்தில் நாம் இழந்த வாய்ப்புக்களைப் பெறுவதற்கான சந்தர்ப்பம் மீண்டும் வெல்லஸ்ஸவுக்கு வருகின்றதாக இந்த கொண்டாட்டத்தைக் குறிப்பிடலாம்" என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு அரசாங்க நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி, இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவக பணிப்பாளர் நாயகம் வசந்தா பெரேரா மற்றும் மொனராகலை மாவட்டத்திலுள்ள அரச நிறுவனத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

- கஹட்டோவிட்ட ரிஹ்மி -
எமது நாட்டிற்கு சுதந்திரம் கிடைப்பதற்காக 1818 இல் வெல்லஸ்ஸ கிளர்ச்சியை ஆரம்பித்தவர்களை உலகறியச்செய்ய நடவடிக்கை. எமது நாட்டிற்கு சுதந்திரம் கிடைப்பதற்காக 1818 இல் வெல்லஸ்ஸ கிளர்ச்சியை ஆரம்பித்தவர்களை உலகறியச்செய்ய நடவடிக்கை. Reviewed by Madawala News on 11/18/2017 02:44:00 PM Rating: 5