Kidny

Kidny

யகீன் மொடல் ஸ்கூலின் உலமாக்களுக்குரிய இலவச முகாமைத்துவப் பயிற்சிக் கருத்தரங்கு.


நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு துறைகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் உலமாக்களுக்கான
இலவச முகாமைத்துவம் சம்பந்தமான கருத்தரங்கு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் நவம்பர் மாதம் 11ம் திகதி சனிக்கிழமை காலை 8:30 மணி முதல் பிற்பகல் 12:15 மணி வரை அக்குறணை யகீன் மொடல் ஸ்கூலில் நடை பெற ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது.


தாம் வேலை செய்யும் இடங்களில் எவ்வாறு நிர்வாக எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் தன்னை முன்னேற்றிக் கொள்வது என்ற தொனிப்பொருளில் பல கட்டங்களாக  நடை பெற இருக்கும் இந்த முகாமைத்துவ செயலமர்வு பங்கு பற்றுவோரில் விரைவான மாற்றங்களை உண்டாக்கக்கூடிய முறையில் செயல் ரீதியாக வடிவமைக்கப் பட்டுள்ளது.


யகீன் மொடல் ஸ்கூலின் சமூக சேவைப் பிரிவின் ஒரு பகுதியாக இந்தப் பெறுமதியான செயலமர்வை இலவசமாக நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதை அறிவிப்பதில் பெருமகிழ்வடைகிறோம்.


இன்ஷா அல்லாஹ் இச் செயலமர்வுக்கான வளவாளர்:
Mohamed Fahmy Farook
MBA (Merit) (UK), CIMA (UK), BSc (Hons.), Diploma in Psychological Counselling (SL)
Senior Lecturer, Business Trainer and Management Consultant
Chairman, Yaqeen Education Systems (PVT) Ltd


கலந்துகொண்டமைக்கான சான்றிதழும் பகல் போஷணமும் வழங்கப்படவேண்டி இருப்பதால் இந்நிகழ்வில் கலந்து கொள்ள விரும்பும் உலமாக்கள் தயவு செய்து தமது பெயர்களை கிழமை நாட்களில்  0778 400 600 அல்லது 0812 301 401 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளவும்.
யகீன் மொடல் ஸ்கூலின் உலமாக்களுக்குரிய இலவச முகாமைத்துவப் பயிற்சிக் கருத்தரங்கு. யகீன் மொடல் ஸ்கூலின் உலமாக்களுக்குரிய இலவச முகாமைத்துவப் பயிற்சிக் கருத்தரங்கு. Reviewed by Madawala News on 11/04/2017 12:31:00 PM Rating: 5