Kidny

Kidny

புதிய உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறைமை – The Young Friends ஏற்பாட்டில் விளக்கமளிக்கும் செயலமர்வு


யங் ப்ரன்ஸ்” (The Young Friends) அமைப்பின் ஏற்பாட்டில் அகில இலங்கை வை.எம்.எம்.. பேரவையின்
ஒத்துழைப்புடன் தேர்தல் சீர்திருத்தம் மற்றும் புதிய உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறைமை தொடர்பான தெளிவுபடுத்தும் செயலமர்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வு நேற்று, ஞாயிற்றுக்கிழமை கண்டி மஹிய்யாவையிலுல்ல கிரேண்ட் வரவேற்பு மண்டபத்தில் (The Grand Reception Hall) நடைபெற்றது.

இந்நிகழ்வில் தேர்தல் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம் மொஹமட் மற்றும் பேராதனைப் பல்கலைக்கழக புவியியல் துறை முன்னாள் விரிவுரையாளர் கலாநிதி . எஸ். எம். நௌபல் கலந்துகொண்டு விளக்கமளித்ததுடன், அகில இலங்கை YMMA பேரவை தலைவர் எம்.என்.எம். நபீல் மற்றும் அகில இலங்கை YMMA பேரவையின் செயலாளர் ஷஹீத் எம். றிஸ்மி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இச்செயலமர்வில் கண்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அரசியல் ஆர்வலர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
புதிய உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறைமை – The Young Friends ஏற்பாட்டில் விளக்கமளிக்கும் செயலமர்வு  புதிய உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறைமை – The Young Friends ஏற்பாட்டில் விளக்கமளிக்கும் செயலமர்வு Reviewed by Madawala News on 11/27/2017 11:40:00 AM Rating: 5