Yahya

தனது 100 ஆவது T20 போட்டியை இன்று விளையாடுகிறது இலங்கை.


இலங்கை கிரிக்கெட் அணி கலந்துகொள்ளும் வரலாற்றுச் சிறப்பு மிக்க போட்டி இன்று (20) இந்தியாவுடன் இடம்பெறுகின்றது.

இலங்கை கலந்துகொள்ளும் 100 ஆவது ரி.20 போட்டி என்பதனாலேயே இன்றைய போட்டி சிறப்புப் பெறுகின்றது.

இதுவரையில் 100 ரி. 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய பெருமையை நியுசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகள் பெற்றுள்ளன.

இந்திய அணியுடன் 03 போட்டிகளில் இலங்கை அணி விளையாடவுள்ளது. இதுவரையில் இந்திய அணியுடன் விளையாடிய 11 போட்டிகளில் இலங்கை 4 போட்டிகளிலேயே வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தனது 100 ஆவது T20 போட்டியை இன்று விளையாடுகிறது இலங்கை. தனது  100 ஆவது T20 போட்டியை இன்று விளையாடுகிறது இலங்கை. Reviewed by Madawala News on 12/20/2017 11:17:00 AM Rating: 5