Yahya

100 சீன நாட்டவர்களுக்கு இலங்கையில் திருமணம்..


100 சீன நாட்டவர் இலங்கையில் நேற்றைய தினம் இல்லற வாழ்க்கையில் பிரவேசித்தனர்.

இந்நாட்டின் பாரம்பரியங்களுக்கு அமைவாக இந்நிகழ்வு இடம் பெற்றுள்ளது.இதற்கு அரச திருமண வைபவம் என பெயரிடப்பட்டிருந்தது.
 
 
புhரம்பரிய வாத்திய இசைகளுக்கு மத்தியில் கொழும்பு மாநகர சபை மைதானத்தில் 50 சீன நாட்டு தம்பதியினர் திருமணம் செய்து கொண்டனர்.

இதன் போது தம்பதியினருக்கு திருமண சான்றிதழ்களை அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க ஜோன் அமரத்துங்க  ராஜித்த சேனாரத்த ஆகியோர் வழங்கினர்.

 நாட்டின் சுற்றுலா துறையை சர்வதேச ரீதியில் மேம்படுத்துவதும் இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையில் நல்லுறவை மேம்படுத்துவதுமே இந்த நிகழ்வின்; நோக்கமாகும்.
100 சீன நாட்டவர்களுக்கு இலங்கையில் திருமணம்..  100  சீன நாட்டவர்களுக்கு இலங்கையில் திருமணம்.. Reviewed by Madawala News on 12/19/2017 12:49:00 AM Rating: 5