Yahya

வேட்புமனுக்களை ஏற்பதற்குறிய கால அவகாசம் நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகிறது..


உள்ளுராட்சி தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்புமனுக்களை ஏற்பதற்குரிய
கால அவகாசம் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவுபெறுகின்றது.

இறுதி நேரம் வரை காத்திராமல் நேர காலத்துடன் வேட்புமனுக்களை தாக்கல் செய்யுமாறும் , இதன் மூலம் தவறுகளையும், நிராகரிப்புக்களையும் தவிர்க்க முடியும் என்று தேர்தல் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்..எல்.ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று நண்பகல் 12 மணிக்கு வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் பூர்த்தியானதும், பிற்பகல் 1.30 வரை ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம்.

உள்ளுராட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இரண்டு கட்டங்களாக ஏற்கப்பட்டன. முதல் கட்டத்தில் 93 உள்ளுராட்சி நிறுவனங்களுக்கான தேர்தலுக்காகவும், இரண்டாவது கட்டத்தில் 248 நிறுவனங்களுக்கான தேர்தலுக்காகவும் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. இதற்கமைவாக 341 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் பணி இன்று நிறைவடைகின்றது.

அதேவேளை, தபால் மூல வாக்குப் பதிவுக்கான விண்ணப்பங்கள் நாளை வெள்ளிக்கிழமை வரை ஏற்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்நாளை நள்ளிரவு 12 மணியளவில் சகல விண்ணப்பங்களும் தேர்தல் அலுவலகங்களுக்கு கிடைத்திருக்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை  பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை இன்றுடன் நிறைவுபெறுகின்றது.
பரீட்சை முடிவடைந்ததும் பரீட்சார்த்திகள் அமைதியாக வீடு திரும்ப வேண்டுமென்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

பரீட்சைகள் இம்முறை சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அனுராதபுரம் மற்றும் நாரஹேன்பிட்டியில் பரீட்சை மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரு பரீட்சார்த்திகள் தொடர்பிலான விசாரணை நடைபெறுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

வேட்புமனுக்களை ஏற்பதற்குறிய கால அவகாசம் நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகிறது..  வேட்புமனுக்களை ஏற்பதற்குறிய கால அவகாசம் நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகிறது.. Reviewed by Madawala News on 12/21/2017 11:24:00 AM Rating: 5