Yahya

இலங்கையின் பொருளாதாரம் 3.3 சதவீதத்தால் வளர்ச்சியடைந்து ; தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம்



2017 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 3.3 சதவீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளதாக தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின், 2017 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுக்கான மதிப்பிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி(மொ.உ.உ), அது தொடர்பான பொருளாதாரக் குறிகாட்டிகளும் தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தால் வெளியிடப்படுகிறது.


தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,


தேசிய கணக்குகள் மதிப்பீடுகளுக்கான 2017 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்குரிய மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதமானது 3.3 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது.


இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2017 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டின் நிலையான (2010) விலையில் 2,351,384 ரூபா மில்லியன்களாக அதிகரித்ததாக பதிவு செய்ததுடன், இது 2016 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 2,276,896 ரூபா மில்லியன்களாகும்.


2017 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் பொருளாதாரத்தின் நான்கு பிரதான பகுதிகளான: விவசாயம், கைத்தொழில், சேவைகள் மற்றும் உற்பத்திப் பொருட்கள் மீதான மானியங்கள் கழிக்கப்பட்ட வரிகள் நடப்பு விலைகளில் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு தமது பங்குகளை முறையே 7.6 சதவீதம், 27.8 சதவீதம், 56.3 சதவீதம் மற்றும் 8.3 சதவீதமாக பங்களிப்பு செய்துள்ளது. 2017ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுப் பொழுதில், சேவைகள் நடவடிக்கைகளானது மேலும் தொடர்ச்சியாக 4.3 சதவீதமாக விரிவடைந்திருக்கும் அதேவேளை கைத்தொழில் நடவடிக்கைகள் 1.9 சதவீத சிறிதளவு வளர்ச்சியையே பதிவு செய்துள்ளது. எவ்வாறெனினும் 2017 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மொத்த விவசாய நடவடிக்கைகள் மறை வளர்ச்சியான 3.3 சதவீத விளைவை பதிவு செய்கின்றது, இதுவே 2010 ஆம் ஆண்டிலிருந்து மூன்றாம் காலாண்டுத் தொடரில் என்றும் பதிவு செய்யப்பட்ட குறைவான வளர்ச்சி வீதமாகும். பொருளாரத்தின் விவசாய துறை முக்கியமாக சாதகமல்லாத காலநிலை நிலைமை காரணமாக (கடும் வறட்சியும் அத்தோடு பெரும் மழையும்) கடந்த 2 வருட காலப் பொழுதில் நாட்டின் சில மாவட்டங்களில் பெரும் தாக்கத்தை எதிர்கொண்டதன் விளைவாக கடந்த 7 காலாண்டுகளாக மறை வளர்ச்சி வீதத்தையே காட்டுகிறது.


விவசாய துறையின் உப பிரிவுகளுக்கிடையில், 'இறப்பர் வளர்ச்சி' மற்றும் 'தேயிலை வளர்ச்சி' என்பன 2017ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் முறையே 22.7 சதவீத, 17.0 சதவீத குறிப்பிடத்தக்க நேர் வளர்ச்சி வீதங்களை பதிவு செய்துள்ளன. இவ்விரு நடவடிக்கைகளும் கடந்த 3 வருடங்களின் பல காலாண்டுகளில் மறை காலாண்டு வளர்ச்சி வீதங்களை பதிவு செய்துள்ளதுடன், அந்நடவடிக்கைகள் 2017 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டிலிருந்து நேர் வளர்ச்சி வீதங்களையே பதிவு செய்துள்ளன. மேலும் 'விலங்கு உற்பத்தி' மற்றும் 'நன்னீர் மீன்பிடி' என்பன முறையே 7.9 சதவீத, 4.8 சதவீத கணிசமாக உயர் நேர் வளர்ச்சி வீதங்களை பதிவு செய்துள்ளன. 'நெல் வளர்ச்சி', 'எண்ணெய் சார்ந்த பழங்களின் வளர்ச்சி: தேங்காய் உள்ளடங்கலாக', 'காய்கறிகளின் வளர்ச்சி', 'கடல் மீன்பிடி' மற்றும் 'வாசனைத்திரவியங்களின் வளர்ச்சி' என்பவற்றின் சேர்க்கப்பட்ட பெறுமதியானது முந்தைய ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும் போது, இக் காலாண்டுப் பகுதியில் முறையே 32.5 சதவீத, 20.8 சதவீத, 6.0 சதவீத, 5.4 சதவீத மற்றும் 4.1 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளன.


கைத்தொழில் துறை மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு நடப்பு விலைகளில் 27.8 சதவீத பங்களிப்பை செய்ததுடன், மேலும் தொடர்ச்சியாக 1.9 சதவீதமாக சிறிய வீதத்தில் விரிவடைந்துள்ளது. கைத்தொழில் துறையின் பிரிவுகளுக்கிடையில் 'கட்டடவாக்கம்' இரண்டாவது உயர் பங்களிப்பை(7.4 சதவீத) செய்வதுடன், 2016 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இக் காலாண்டுப் பொழுதில் 2.6 சதவீத மந்தமான வளர்ச்சியையே காட்டியுள்ளது. 2017 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் முழு உற்பத்தி நடவடிக்கைகளும் 2.4 சதவீதத்தால் வளர்ச்சி அடைந்துள்ளன. இக் காலாண்டில் 'புடவை மற்றும் ஆடையணிகள் உற்பத்தியில்' 7.9 சதவீத நேர் வளர்ச்சியை காணக்கூடியதாகவும், முழு உற்பத்தி நடவடிக்கைகளில் இரண்டாவது உயர் பங்களிப்பை கொண்டதாகவும் உள்ளது. மேலும் 'ஏனைய உலோகமல்லாத கனிப்பொருள் உற்பத்திகள்', 'அடிப்படை உலோகங்கள் மற்றும் உருவமைக்கப்பட்ட உலோக உற்பத்திகள்', 'இறப்பர் மற்றும் பிளாத்திக்கு பொருட்கள் உற்பத்தி', மற்றும் 'மின்சாரம், வாயு, நீராவி மற்றும் குளிரூட்டி வழங்கல்' என்பன முறையே 19.1 சதவீத, 10.5 சதவீத, 4.5 சதவீத, மற்றும் 3.4 சதவீத குறிப்பிடத்தக்க நேர் வளர்ச்சி வீதங்களை பதிவு செய்துள்ளன. எவ்வாறினும் 'உணவு, குடிபானங்கள் மற்றும் புகையிலை உற்பத்திகள்' நடவடிக்கை மொத்த தேசிய உற்பத்திக்கு 8.6 சதவீத பங்களிப்பை செய்தும், இந்த காலாண்டுப் பொழுதில் 2.4 சதவீதத்தால் ஒடுங்கியுள்ளது.


மூன்று பிரதான நடவடிக்கைகளில், 2016 ஆம் ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும் போது, 2017 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் சேவைத் துறையின் நடவடிக்கைகள் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு உயர் பங்களிப்பை (56.3 சதவீத) வழங்குவதுடன், 4.3 சதவீதத்தால் வளர்ச்சியடைந்திருக்கிறது. சேவைத் துறையின் செயற்பாடு விசேடமாக பின்வரும் உப பிரிவுகளில் 'நிதிச் சேவை நடவடிக்கைகள்', 'தொலைத்தொடர்புகள்', 'மனித நல நடவடிக்கைகள்' மற்றும் 'காப்புறுதி' என்பன குறிப்பிடத்தக்க உயர் வளர்ச்சி வீதங்களை முறையே 19.6 சதவீத, 19.5 சதவீத, 19.3 சதவீத மற்றும் 10.9 சதவீதத்தை பதிவு செய்துள்ளன. இத்துடன் 'தங்குமிடம், உணவு மற்றும் குடிபானங்கள் பணி நடவடிக்கைகள்', 'தகவல் தொழில்நுட்ப நிரலாக்க செயற்பாடுகள் மற்றும் ஆலோசனைகள்', 'மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம்' மற்றும் 'ஏனைய ஆளணி சேவைகள் நடவடிக்கைகள்' இக்காலாண்டுப்பொழுதில் சிறியளவில் விரிவுபட்டுள்ளன.


தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்திற்கு அமைய, 2017 ஆம் மூன்றாம் காலாண்டுக்கான மொத்த தேசிய உற்பத்தி மதிப்பிடலின் மேலதிக விபரங்கள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. (www.statistics.gov.lk)

இலங்கையின் பொருளாதாரம் 3.3 சதவீதத்தால் வளர்ச்சியடைந்து ; தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் இலங்கையின் பொருளாதாரம்  3.3 சதவீதத்தால் வளர்ச்சியடைந்து ; தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம்  Reviewed by Madawala News on 12/19/2017 03:57:00 PM Rating: 5