Kidny

Kidny

பெப்ரவரி 10 உள்ளூராட்சி மன்ற தேர்தல் ..


எதிர்வரும் 2018 பெப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்தில் சனிக்கிழமை உள்ளூராட்சி மன்ற
தேர்தல் நடைபெறும் என பிரதமர் தெரிவித்தார்.

எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி எதிரான மனுக்கள் மீளப் பெறப்பட்டதை அடுத்து, அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

வர்த்தமானிக்கு எதிரான நீதிமன்ற உத்தரவை அடுத்து, 93 உள்ளூராட்சி சபைகளுக்கு மாத்திரம் வேட்புமனுக்களைக் கோரும் அறிவிப்பு தேர்தல் ஆணையகத்தினால் வெளியிடப்பட்டிருந்தது.

வர்த்தமானிக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதை அடுத்து, ஏனைய உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்கள் கோரும் அறிவிப்பு 4ஆம் திகதி வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதேவேளை, ஏற்கனவே 93 உள்ளூராட்சி சபைகளுக்கு வேட்புமனுக்களை கோரி வெளியிடப்பட்ட அறிவிப்பிலும் திருத்தம் செய்யப்படவுள்ளதுஅனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் வேட்புமனுக்களை கோரும் நாட்களை உள்ளடக்கிய புதிய அறிவிப்பு திங்கட்கிழமை வெளியிடப்படவுள்ளது.

அத்துடன், முன்னதாக உள்ளூராட்சித் தேர்தலை ஜனவரி 27ஆம் நாள் நடத்தும் திட்டத்திலும் மாற்றம் செய்யப்பட்டவுள்ளதுபெப்ரவரி மாதத்தின் முதலாவது சனிக்கிழமை தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அதற்கு அடுத்த தினமான 4ஆம் திகதி (04-02-2018) இலங்கையின் சுதந்திரத் தினம் என்பதால் அதற்கு அடுத்த சனிக்கிழமையான பெப்ரவரி 10ஆம் திகதி தேர்தல் நடைபெறுமென தெரிவிக்கப்படுகிறது.
பெப்ரவரி 10 உள்ளூராட்சி மன்ற தேர்தல் ..  பெப்ரவரி 10 உள்ளூராட்சி மன்ற தேர்தல் .. Reviewed by Madawala News on 12/03/2017 07:58:00 PM Rating: 5