Yahya

மக்கள் காங்கிரஸின் மடவளை தேர்தல் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது !


கௌரவ அமைச்சரும் முஸ்லிம் சமூகத்தின் இன்றைய குரலுமான மதிப்பிற்குறிய  ரிஸாட் பதியுத்தீன் தலைமையில் இயங்கும் 'அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்' எதிர் வரும் 2018 இற்கான உள்ளூராட்சித் தேர்தலில் மயில் சின்னத்தில் தனித்துப் போட்டியிட களமிறங்கியுள்ளதை யாவரும் அறிவர்.

இந்நிலையில் கண்டி மாவட்டத்தின் பாததும்பர பிரதேச சபைக்கு மடவளை  மடிகே வட்டாரத்தின்  வேட்பாளராக மயில் சின்னத்தில்  போட்டியிடும் அரசியல் அனுபவசாலயும் சமூக சேவகருமான  மதிப்பிற்குறிய அக்பர் அப்துல் மஜீத் அவர்களது  இல்லத்தில் மயில் சின்னத்துக்கான தலைமை காரியாலயம் நேற்று 30-12-2017 மாலை 6:30 மணியளவில் திறந்து வைக்கப் பட்டது.

அந்நிகழ்வில் கண்டி மாவட்டத்தின் பிரதான இணைப்பாளர்களான கௌரவ ரியாஸ் இஸ்ஸதீன் மற்றும் முன்னால் அமைச்சர் மர்ஹும் காதர் ஹாஜியாரின் மருமகனான கௌரவ அம்ஜத் ஹாஜியார் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

அத்துடன் விஷேட பேச்சாளராகவும் அதிதியாகவும் வடமாகாணசபை உருப்பினரும் அமைச்சரவர்களது இணைப்புச் செயலாளருமான கௌரவ அலிகான் ஷரீப் அவர்களும் கலந்து உரையாற்றினார்கள்.

மேலும்  இந்த நிகழ்வில் பாத்தும்பர பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் மொஹமட் மர்சூக் , நஜ்மி எஹிசான் , மொஹமட் சம்ரி , உள்ளிட்ட்வர்களும் கல்ந்துகொண்டனர்.

'மாறாத மலையக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவது கொண்டு சமுதாயத்தின் பலத்தை அரசுக்கு உணர்த்த வேண்டும்' எனும் பிரதான தொனிப் பொருளில் அவ்வுரைகள் நிகழ்த்தப் பட்டன.

கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பலர் இக்கூட்டத்தில் கலந்து சிறப்பித்தனர். இன்ஷா அல்லாஹ் மேலதிக வாக்குகளால் மயில் சின்னம் மடவளையில் முதலிடத்தை பெறும் என்பதற்கு மக்கள் ஆதரவு ஆதாரமாக இருந்தது.

'உணர்வு பெறுவோம்
ஒன்றினைவோம்.

'சமுதாய உணர்வுகளை காத்திட!
அலைகடலென எழுந்திடுவோம்.

ACMC ஊடகப்பிரிவு - கண்டி மாவட்டம்   
மக்கள் காங்கிரஸின் மடவளை தேர்தல் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது !  மக்கள் காங்கிரஸின் மடவளை தேர்தல் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது !  Reviewed by Madawala News on 12/31/2017 04:00:00 PM Rating: 5