Kidny

Kidny

2020 இல் நாட்டின் தலைவராக யார் வரவேண்டும் ; மவ்பிம வெளியிட்ட ஆய்வு முடிவுகள் இதோ ..


2020 ஆம் ஆண்டில் இந்த நாட்டில் ஜனாதிபதியாக நாட்டை நேசிக்கின்ற, படித்த, ஏகாதிபத்திய
இராணுவ பாணி ஆட்சி அமைப்பை கொண்டதலைவரே பொருத்தமானவர் என்று கொழும்பு பல்கலைக்கழக  ஊடகப் பிரிவு நடத்திய  ஆய்விக் தெரியவந்துள்ளதாகமவ்பிம நாழிதழ்தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வின் முடிவுகளின் படி 2020ஆம் ஆண்டில் இலங்கையின் தலைவராக கோட்டாபய ராஜபக்‌ஷ வருவதற்கு 38.18 % பேர்களின் விருப்பைப் பெற்றுள்ளார் அடுத்த இடம் 28.64 % விருப்பு சஜித் பிரேமதாசாவுக்கு கிடைத்துள்ளது.

எதிர் கட்சி தலைவராக அனுர குமார திசாநாயக்க அதிக பேர்களின் விருப்பை பெற்றுள்ள அதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவுக்கு 9.18 % பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவும் 8.64 %  விருப்பு தெரிவித்துள்ளனர்.

நுவரெலியா,கேகாலை,இரத்தினபுரி மாவட்டங்களை சேர்ந்த 18-75 வயதுக்கு இடைப்பட்டவர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 இல் நாட்டின் தலைவராக யார் வரவேண்டும் ; மவ்பிம வெளியிட்ட ஆய்வு முடிவுகள் இதோ ..   2020 இல் நாட்டின் தலைவராக யார் வரவேண்டும் ; மவ்பிம வெளியிட்ட ஆய்வு முடிவுகள் இதோ .. Reviewed by Madawala News on 12/02/2017 10:21:00 AM Rating: 5