Kidny

Kidny

2100 முஸ்லிம் பெண்களை இந்து வாலிபர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் திட்டம் தொடர்பில் பகிரங்க அறிவிப்பு


இந்தியாவில் “”லவ் ஜிகாத்" சர்ச்சையாக உருவெடுத்துள்ள நிலையில் அடுத்த ஆறு மாதங்களில் 2,100 முஸ்லீம் பெண்களை இந்து வாலிபர்ளுக்கு திருமணம் செய்து வைக்க  இலக்கு வைத்து ஆர்.எஸ்.எஸ் உடன் இணைந்து செயலாற்றும்  இந்து ஜகிரான் மன்ச்ரிவர்ஸ் லவ் ஜிஹாத்" என்ற திட்டத்தை  தொடங்க முடிவு செய்துள்ளது.


ஆர்.எஸ்.எஸ் உடன் இணைந்து  செயலாற்றும் இந்து ஜகிரான் மன்ச் அமைப்பின் தலைவரான அஜ்ஜு சௌஹான் இது தொடர்பில் கூறுகையில்


"எங்கள் பெண்களை அவர்களின் உண்மையான அடையாளங்களைக் கையாள்வதன் மூலம் திருமணம் செய்துகொள்பவர்களுக்கு இது ஒரு பொருத்தமான பதிலாக அமையும்.


இந்தியாவில் இந்தலவ் ஜிஹாத்தேசிய பிரச்சனையாக இன்று உறுவெடுத்துள்ளது.எமது இந்த பிரச்சாரம் அதனை தீர்க்க உதவும்.


மேலும் இந்து மத சடங்குகளுடன் இந்த திருமணங்கள் ஏற்பாடு செய்யப்படும்.எனினும் முஸ்லீம் பெண்கள் தங்கள் பூஜை வழிபாட்டு முறையை (மத வழிபாட்டு முறை) அல்லது மதத்தை மாற்றிக்கொள்ள வேண்டியதில்லை.எனினும், அவர்கள் இந்து மதம் மாற வேண்டும் என்றால், அவர்கள் அவ்வாறு செய்யவதை நாம் வரவேற்கிறோம் எஆர்.எஸ்.எஸ் உடன் இணைந்து  செயலாற்றும் இந்து ஜகிரான் மன்ச் அமைப்பின் தலைவரான அஜ்ஜு சௌஹான் கூறியுள்ளார்.

2100 முஸ்லிம் பெண்களை இந்து வாலிபர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் திட்டம் தொடர்பில் பகிரங்க அறிவிப்பு  2100 முஸ்லிம் பெண்களை இந்து வாலிபர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் திட்டம் தொடர்பில் பகிரங்க அறிவிப்பு Reviewed by Madawala News on 12/01/2017 01:58:00 PM Rating: 5